Saturday, March 16, 2024

செய்தி துளிகள் 14032024

 📕📘தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குநர் மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பணியிட மாற்றம்

📕📘கோடை காலம் தொடங்கியதால், ஆந்திர மாநிலத்தில் வரும் மார்ச் 18 முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு.

முன்னதாக, தெலங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது.

📕📘திறந்தநிலை பல்கலை வழங்கும் பட்டங்களை எப்படி கருத வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை, உடனடியாக பல்கலை மானிய குழு வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

📕📘2022-2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது - இருவர் தேர்வு

📕📘CTET 2024 - தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2

📕📘ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘12ம் வகுப்பு வேதியியல் தேர்வில் 8 'போனஸ்' மதிப்பெண் - மாணவர்கள் கோரிக்கை

📕📘10ஆம் வகுப்பு தமிழ் மொழி அல்லாத சிறுபான்மை மொழியை தாய்மொழியாக கொண்ட மாணவர்கள் 2023-2024ஆம் ஆண்டிற்கு மட்டும் தமிழ் மொழிப் பாடம் எழுதுவதிலிருந்து விலக்கு - அரசாணை வெளியீடு.

📕📘உயர்த்தப்பட்ட அகவிலைப்படி 4% ஏப்ரல் மாத ஊதியத்தில் வழங்கப்படும்.                                                👉மார்ச் மாதம் ஏற்கனவே உள்ள 46% மட்டுமே வழங்கப்படும்.                👉ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மூன்று மாதங்கள் நிலுவை தொகை ஏப்ரல் மாதம் வழங்கப்படும் -அரசாணையின்படி (4% அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு - G.O.Ms.No.132)

📕📘ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பயிற்சி தேதி நீட்டிப்பு

📕📘கலைஞர் எழுதுகோல் விருது பெற 30.04.2024 க்குள்ளாக விண்ணப்பிக்கலாம்.

📕📘சம வேலைக்கு சம ஊதியம் ' கோரி போராட்டத்தில் பங்கேற்ற நாள்களை தகுதி உள்ள விடுப்பில் அனுமதித்து பணிப்பதிவேட்டில் பதிய வேண்டும்.

📕📘மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலருக்கு நிருவாக மாறுதல் அளித்து ஆணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘ஆய்வக உதவியாளர்களுக்கு 2024-25ஆம் கல்வியாண்டு முதல் செய்முறை பாடவேளை கால அட்டவணை தயாரித்து வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

📕📘ஆளுநர் விழாவை புறக்கணித்த அமைச்சர்

சென்னை, வேப்பேரியில் நடைபெறும் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு

பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

📕📘இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

👉2024ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 20ம் தேதி வரை நீட்டிப்பு.

📕📘தேமுதிகவுடன் மீண்டும் அதிமுக பேச்சுவார்த்தை

தேமுதிகவை அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்த அதிமுக

ஓரிரு நாட்களில் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல்

📕📘பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்:-

👉பொள்ளாச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

1273 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள்துவக்கம்

கோவை,ஈரோடு,நீலகிரி,திருப்பூர் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்.

📕📘பதவிக்காக பாஜகவில் சேரவில்லை

எந்த பதவியையும் எதிர்பார்த்து பாஜகவில் நான் சேரவில்லை

16 வருடம் தனியாக கட்சி நடத்தியுள்ளேன், என்னை பற்றி பாஜக அறியும்

பாஜக தலைமை சொல்லும் பணியை செய்வேன்

நான் கூறிய ஒரு கருத்தை மட்டும் வைத்து விமர்சித்து வருகிறார்கள், நான் தரம் தாழ்ந்து யாரையும் விமர்சித்ததில்லை

எனது முடிவில் உறுதியாக இருக்கிறேன்-சரத்குமார் 

📕📘அரசு வேலையில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு

 - மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட காங்கிரஸ்                                                                            📕📘வாகன ஓட்டிகளே!  நாளை  paytm fastagக்கிற்கு கடைசி நாளாகும்.                                               📕📘மகளிருக்கு காங்கிரசின் 5 தேர்தல் வாக்குறுதி

👉தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக மகளிருக்கு 5  உத்தரவாதத்தை அளித்துள்ள காங்கிரஸ் - மல்லிகார்ஜூன கார்கே வீடியோ வெளியீடு

👉ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித் தொகை

👉மத்திய அரசின் புதிய பணி நியமனங்களில் பெண்களுக்கு பாதி உரிமை 

👉அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவுப் பணியாளர்களின் மாத சம்பளத்தில் மத்திய அரசின் பங்கு இரட்டிப்பாக்கப்படும்

👉பெண்களின் உரிமைகளுக்காக, ஒவ்வொரு பஞ்சாயத்திலும் சட்ட உதவியாளர் நியமிக்கப்படுவர்

👉நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பணிபுரியும் பெண்களுக்காக விடுதி                                                  📕📘மக்களவை தேர்தலில் கடுமையான தோல்வியை சந்திக்கிற அரசியல் சூழல் ஏற்பட்டதிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள, இறுதியாக குடியுரிமை திருத்தச் சட்ட அஸ்திரத்தை பாஜக பயன்படுத்துகிறது..

செல்வப்பெருந்தகை காங்கிரஸ் தலைவர்                                                                                📕📘"எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளதனால், இதுவொரு மெகா கூட்டணியாக விளங்குகிறது.

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

📕📘வீடு வீடாக சென்று குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த உண்மை நிலையை மக்களிடம் பிரச்சாரம் செய்வோம்  

அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேட்டி

📕📘நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் 1.20 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்கள் பயன் பெறுவார்கள். 

பட்ஜெட் அறிவிப்பன் படி  பொதுத் துறை செயலாளர் அரசாணை வெளியிட்டார்.

📕📘ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு

👉தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5000 அடியாக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 200 கன அடியாக இருந்த நிலையில் நீர்வரத்து  திடீர் அதிகரிப்பு.

📕📘தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.48,880க்கு விற்பனை

கிராமுக்கு ரூ.40 குறைந்து, ரூ.6,110க்கு விற்பனை.

📕📘தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக இருங்கள்.

மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் பேச்சுக்கு

5 ரூபாய் தந்தாலும் அதுவும் உதவி தான்.

நடிகை அம்பிகா பதிலடி

📕📘தேமுதிகவுடன்  கூட்டணி தொடர்பாக தொடர்ந்து பேசி வருகிறோம். பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் உங்களுக்கு தெரியப்படுத்துவோம்

எடப்பாடி பழனிசாமி

📕📘"2 மாதத்தில் இரண்டு ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்து இருப்பது இதுவே முதல்முறை

டாடா நிறுவனம் ₹9000 

கோடியை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ளது குறித்து அமைச்சர் டிஆர்பி ராஜா பெருமிதம்.

📕📘ஈரோடு மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகள்

ஈரோடு மாவட்டத்தில் குளிரூட்டப்பட்ட மஞ்சள் கிடங்கு அமைக்கப்படும்

ஈரோடு மாநகராட்சியில் ₨30 கோடியில் கழிவு 

நீர் அகற்றும் திட்டம்

8 சமுதாய நல கூடங்கள் அமைக்கப்படும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் 

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

📕📘நாடாளுமன்ற தேர்தலை நடத்த முழுமையாக தயாராக உள்ளோம்"

 "அனைத்து கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு"

"போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான மற்றும் போதிய பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை"

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

📕📘"கடினமான தொகுதிகளை எங்களிடம் கொடுத்து விடுங்கள், நாங்கள் வென்று விடுவோம் என கூட்டணி கட்சிகளிடம் கூறியிருந்தோம்"

ஆளுங்கட்சியாக இருந்தாலும் திமுக  யாரையும் கழட்டிவிடவில்லை, தொகுதிகளையும் குறைக்கவில்லை 

கேட்கும் எண்ணிக்கையை கொடுத்துவிடுங்கள் என தொகுதி பங்கீடு குழுவிற்கு முதல்வர் அறிவுறுத்தி இருந்தார் 

திமுக தரப்பு விளக்கம்.

📕📘போக்குவரத்து ஊழியர்களுக்கு 50 சதம் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்; 

மேலும் அகவிலைப்படி நிலுவைத்தொகையையும் முழுமையாக வழங்க வேண்டும் 

சிஐடியூ

📕📘கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்”  

அமைச்சர் துரைமுருகன்

📕📘தெலங்கானாவில் இனி வாகனப் பதிவு எண்கள் 'TG' என்றே குறிப்பிடப்படும்

அம்மாநில அரசு அறிவிப்பு                                                       📕📘ஐடி, சிபிஐ போன்ற ஏவுகணைகளை பயன்படுத்தினாலும் அஞ்சாமல் எதிர்கொள்கின்ற இயக்கம் திமுக: 

அமைச்சர் சேகர்பாபு பேச்சு.

📕📘எஸ்.பி.ஐ. வங்கி சமர்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

தேர்தல் ஆணையம் எப்பொழுதும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாகவே இருக்கும்

டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.

📕📘📕📘📕📘📕📘📕📘                                                       🌹🌹அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

No comments:

Post a Comment