Saturday, March 30, 2024

மரியாதை என்பது கேட்டுப் பெறுவதா?

மரியாதை என்பது கேட்டுப் பெறுவதா? அல்லது கொடுத்து மகிழ்வதா?*


தம்மை விட வயதிலே இளையவர்களாக இருந்தாலும் சரி, அல்லது மூத்தவர்களாக இருந்தாலும் சரி, தன் கீழ் நிலைப் பணியாளர்களாக இருந்தாலும் சரி உரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தலே சிறப்பு. 


இயல்பாகவே நல்ல குணமுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்கான மரியாதை தானாகவே கிடைத்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 


மேலும் மரியாதை என்பது ஒரு வழிப் பாதையல்ல! அது இரு வழிப் பாதையாகும்.


மரியாதை என்பது கொடுத்துப் பெறுவது. அது கேட்டுப்

பெறுவதல்ல. 


இது புரிந்து விட்டால் வாழ்க்கையில் நமக்குச் சிக்கல்களே இல்லை. 


முதலில் நம்மை மதிக்கக் கற்றுக்

கொண்டால் தான்,

மற்றவர்களும் நம்மை மதிப்பார்கள் என்பது அறிஞர்களின் கூற்று. 


தன்னை உணர்ந்தவர் எவருமே கௌரவம் பார்க்க மாட்டார்கள். யாரிடமும் தனக்கான மரியாதையை அவர்கள் கேட்டுப் பெறவும் மாட்டார்கள்.


ஒருவருக்கொருவர் மற்றவர்களை தன்னை விட கீழ் நிலையில் உள்ளவர்கள் என்று தரக் குறைவாக எண்ணாமல்,

ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்திக் கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும். 


ஒருவருடைய மனதை புண் படுத்தாத, நல்ல குணங்கள் உள்ளவர்களை மக்கள் என்றுமே மதிப்பார்கள். 


No comments:

Post a Comment