Friday, March 29, 2024

ஆணை நெருஞ்சில் - தினம் ஒரு மூலிகை



ஆணை நெருஞ்சில். சதை பற்றுள்ள வெகுட்டல் மனமுள்ள இலைகளை உடைய சிறு செடி மஞ்சள் நிற பூக்களையும் முள்ளுள்ள உருளை வடிவ காய்களை உடையது தானா வளரக்கூடியது தண்டு இலை விதை மருத்துவ பயன் உடையது சிறுநீர் பெருக்குதல் குளிர்ச்சி தரல் உடல் உரமாக்குதல் காமம் பெருக்குதல் மாதவிலக்கு சிக்கல் அறுத்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது ஒரு முழு செடியை ஒரு லிட்டர் நீரில் இட்டு கலக்க நீர் வழுவழுப்பாக மாறிவிடும் இதனை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர் கடுப்பு வெள்ளை சுட்டு மூத்திரம் மலட்டுத்தன்மை ஆகியவை தீரும் 50 கிராம் இலையை மென்மையாய் அரைத்து தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர சிறுநீர் தடை நீர் எரிச்சல் வெள்ளை உடம்பு எரிச்சல் ஆகியவை குணமாகும் 20 கிராம் விதையை ஒன்று இரண்டாய் உடைத்து அரை லிட்டர் நீரில் இட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி வடிகட்டி காலை மாலையாக சாப்பிட்டு வர நீர் சுருக்கு தீரும் விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும் நன்றி.

No comments:

Post a Comment