Tuesday, March 26, 2024

அதிக நாணயங்களை அச்சிடுவது எவ்வாறு உயர் பணவீக்கத்திற்கு வழிவகுக்கிறது?

இக் கேள்விக்கு பதிலளிக்கும் முன் பணம் என்பது எவ்வாறு உருவாயிற்று என்று பார்க்கலாம். பணத்தை முதன்முதலில் உபயோகம் செய்தவர்கள் சைனாவின்Tang என்ற ராஜ வம்சத்தினர். இவர்கள் பணத்தை முதலில் உபயோகப்படுத்திய வருடம் 1023. 17ஆம் நூற்றாண்டில் தான் காகித பணத்தை ஐரோப்பாவில் உபயோகம் செய்ய தொடங்கினர். ஒரு கட்டத்தில் இந்த டேங்க் என்ற ராஜ வம்சத்தினர் அதிக அளவு பணத்தை அச்சிட்ட தனால் பணம் மதிப்பு இழந்தது. மறுபடியும் சைனா பண்டமாற்று முறைக்கு சென்றது

டேங்க் ராஜ வம்சத்தினர். வெண்கலத்தில் காசுகள் தயார் செய்தனர். அந்தக் காசுகளில் சதுர வடிவில் ஓட்டைகள் இருக்கும். அந்த காசுகளின் பெயர்.Kaiyuans. இந்தKaiyuans தான் பின்னாளில் மருவி cash என்று ஆனது என்று சொல்வார்கள்

அதிகமானோர் நினைத்துக் கொண்டிருப்பது ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்திற்கும் அந்த நாட்டிலேயே அச்சிடப்படும் பணத்திற்கும் சம்பந்தம் உள்ளது என்று. இது ஒரு கட்டுக்கதை தங்கத்திற்கும் நாட்டில் பணம் அச்சிடப்படு வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும் பொழுது அந்த நாட்டுக்கு டாலர்கள் அதிகமாக வரும். அந்த டாலர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற காரணத்தினால் தங்கத்தை வாங்குவார்கள். இவ்வளவுதான் பணத்திற்கும் தங்கத்திற்கும் உள்ள சம்பந்தம். அது ஒரு சேஃப்டி நெட், அது ஒரு இன்சூரன்ஸ், அவ்வளவே!.

பணத்தை அதிகமாக அச்சிட்டால் அல்லது பெரிய தொகைக்கு அச்சிட்டால் அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து விடுமா? நிச்சயம் வளராது. அழிவு பாதையிலே செல்லும் நாடுதான் இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை செய்யும். 2007இல் ஜிம்பாப்வே நாட்டின் ஒரு டாலரையும் 2008 இல் இருந்து சிம்பாப்வே நாட்டின் ஒரு நூற்று டிரில்லியன் டாலர்களையும் கீழே பாருங்கள்.


மேலே உள்ளது ஜிம்பாப்வே நாட்டு கரன்சி. அமெரிக்க நாட்டின் ஒரு டாலர் என்பது ஜிம்பாப்வே நாட்டின் 25 மில்லியன் டாலர்களுக்கு சமம்.

ஒரு மில்லியன் சிம்பாப்வே டாலர்களை வைத்துக்கொண்டு நீங்கள் ஒரு பாட்டில் பியர் மட்டுமே வாங்கலாம்.

ஆப்பிரிக்காவில் மிக மிகப் பணக்கார நாடாக இருந்த சிம்பாப்வே, ராபர்ட் முகாபே அவர்களின் அட்டூழியத்தால் ஒன்றுமில்லாத நிலைக்கு சென்றுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அவருடைய முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகள்.

எந்த ஒரு பொருளுமே அதிகமாக உற்பத்தி ஆனால் அந்த பொருளுக்கான மதிப்பு குறையும். பணமும் அவ்வாறே!, நீங்கள் எக்கச்சக்கமான பணத்தை அச்சிட்டால் பணத்தின் மதிப்பு நிச்சயமாகக் குறையும். . பணம் அதிகமாக புழங்கும் பொழுது, தேவை இருக்கிறதோ, இல்லையோ, பொருட்களை அதிகமாக வாங்க தொடங்குகிறார்கள். உற்பத்தி பழையபடியே இருக்க பொருட்களின் தேவை அதிகரிக்கும் போது உற்பத்தியாளர் விலையை கூட்டுகிறார். விலையை கூட்டும்போது உங்களிடம் அதிகமாக இருக்கும் பணத்திற்கு மதிப்பு குறைகிறது. நீங்கள் கேட்கலாம் நான் ஏன் ஒரு பொருளை வாங்க வேண்டும், நான் வங்கிகளை இந்த பணத்தை டெபாசிட் செய்யக்கூடா தா என்று?. இதுவும் நல்ல கேள்விதான்! வங்கிகளில் பணத்தின் வரத்து அதிகமாகும் பொழுது அவர்கள் என்ன செய்வார்கள்!. அவர்கள் அப்பணத்தை கடன் கொடுக்க வேண்டும்! கடன் கேட்க யாரும் வராத பட்சத்தில் வட்டியை குறைப்பார்கள்!, நிலைமை இப்படியே சென்றால் வட்டியே இல்லை என்பார்கள். இப்போது உங்கள் பணத்திற்கு மதிப்பில்லை. இரண்டு சிறிய உதாரணங்களுடன் இப் பதிவினை முடித்துக்கொள்கிறேன்.

தக்காளிக்கு எத்தனை தேவை உள்ளதோ அத்தனை தக்காளியை உற்பத்தி செய்தால் விலை சீராக இருக்கும். திடீரென்று தக்காளி உற்பத்தி வெகுவாக அதிகரித்து விட்டால். தக்காளி விலை தன்னால் குறையும். அவ்வண்ணமே பணப்புழக்கம் அதிகரித்து விட்டால் பணவீக்கம் அதிகரித்து பணத்தின் மதிப்பும் குறையும்.

நரேந்திர மோடி அவர்கள் நான் ஜெயித்து ஆட்சிக்கு வந்தால் சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை எடுத்து ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுகிறேன் என்று கூறினார் என சொல்வார்கள். அவர் சொன்னாரா, இல்லையா, என்ற பிரச்சினைக்கு நாம் செல்ல வேண்டாம். அவ்வாறு அவர் 15 லட்சம் போட்டால் என்ன ஆகும்!? நீங்கள் வாங்கும் ஒரு சட்டையின் விலை ஒரு லட்சம் ரூபாய் ஆகும். துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு கிலோ பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும். இதுவே நிதர்சன உண்மை. உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது வெளிநாட்டு ஏற்றுமதியை அதிகரிப்பது இதுவே ஒரு நல்ல பொருளாதாரத்திற்கு அடையாளம். பணம் அதிகமாக அச்சடிக்கப்படுவது அல்ல.

No comments:

Post a Comment