*சிறு கீரை*. தாவரவியல் பெயர்:Amaranthus viridis சிறுகீரை கீரையில் 80 விழுக்காடு நீர் உள்ளது இது 33 கலோரி சக்தியை கொடுக்கிறது 100 கிராம் கீரையில் 251 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும் 55 மில்லி கிராம் மணி சத்தும் 27.3 மில்லி கிராம் இரும்புச் சத்தும் உள்ளன இதன் இலைகளையும் தண்டுகளையும் முளைக்கீரை போல உணவாக தயாரித்து பயன்படுத்தலாம் இதன் விதையையும் உணவாக பயன்படுகிறது இதனை தினமும் சமைத்து சாப்பிட இரும்பு சத்தும் புது ரத்தமும் உடலில் பரவும் இது வாத நோயை நீக்கக் கூடியது அத்துடன் கல்லீரலுக்கும் நன்மை செய்யும் உடலில் தோன்றும் பித்த சம்பந்தமான நோய்களை இது கண்டிக்கும் தன்மை பெற்றது விஷக்கடி முடிவாக பயன்படக்கூடியது அத்துடன் சிறுநீரகம் தொடர்பான குறைபாடுகளை அகற்ற வல்லது இக்கீரையினால் உடலுக்கு அழகும் வனப்பும் கிடைக்கும் இது தும்பிற நோய் காசம் படலம் விரணம் மூத்திர கிரிச்சர வீக்கம் பித்த நோய் தாவரங்களினால் ஏற்படும் நஞ்சு முதலியவை நீங்கும் நல்ல சுவையும் நாவிற்கு ருசியும் உடலுக்கு வலுவும் கொடுக்கும் அற்புத மூலிகை சிறுகீரை நன்றி.
No comments:
Post a Comment