வயது கூடக் கூட நம் பெற்றோர் குழந்தைகளாகி விடுவார்கள்.*_
_முதுமை_ _இன்னொரு_
_குழந்தைப்பருவம்._
_*சொன்னது மறக்கும். சொன்னதையே திரும்பச்சொல்ல வைக்கும்.*_
_நிறையப் பேச வைக்கும்._
_பேசாமல் அடம் பிடிக்கவும் வைக்கும்._
_*உணவின் மீது அதீத பிரியம் அல்லது அதீத வெறுப்பு இரண்டும் வரும்.*_
_நோய் கூடும்._
_நோய் கூடியதை போல_
_காட்டத்தோன்றும்._
_*நோய் வந்ததை மறைக்க*_
_*கூடத்தோன்றும்.*_
_கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த முதிர்ந்த குழந்தைகளை._
_*உங்களை வளர்த்தோரை நீங்கள் வளர்க்க இது ஒரு அரிய எளிதில் கிடைக்காத வாய்ப்பாக எண்ணுங்கள்.*_
_அமர்ந்து பழங்கதைகள் பேசுங்கள். பிடித்தவற்றைத் தேடிச் செய்யுங்கள். வாங்கிக் கொடுங்கள்._
_*நானிருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வைக் கொடுங்கள்.*_
_எதிர்காலம் அல்லது இறுதிக் காலம் குறித்த பயம் வர விடாதீர்கள்._
_*எக்காரணம் கொண்டும் யாரிடத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள்.*_
_எங்கும் விட்டு விடாதீர்கள்._
_*எது எப்படியோ இந்தத் தாய் தகப்பன் வழியே தானே நாம் வந்தோம்.*_
_அந்த நன்றி மறவாமை வேண்டும்._
_*பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் முதிர்ந்த குழந்தைகளை.*_
_காலங்கடந்த பச்சாதாபத்திலும், புகைப்படத்திற்கு விருந்து படைத்து கண்ணீர் விடுவதாலும் எந்தப் பயனுமில்லை._
_*காலத்தின் கட்டாயம்*_
_*எனக்கு பிடித்தவை*_
_*உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்*_
_இந்த வரிகள் என்னைப் பெற்ற தாய் தந்தை மட்டுமன்றி_ _அனைத்து தாய் தந்தை மனம்_ _குளிர அவர்களின்_
_பாதங்களில்_
_சமர்ப்பிக்கப்படுகிறது._
_*படித்து புரிந்து மனம் நிறைந்தவர்கள் பகிரலாம் பலர் மனம் மாறும் நல் மனங்கள் உருவாகும்.*_
No comments:
Post a Comment