Tuesday, March 12, 2024

குடும்பம் நலமாக இருந்திட.

1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்... 

 

■ வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்..... 


■ தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.... 


■ உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ.....????


■ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._


■ 2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.... 

உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்..... 

அல்லது.... 

■ அவளை ஒரு தோழியாக பாருங்கள்.... 


■ உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல்.... 

■ அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்....!!!!. 

ஏனென்றால்...

■ அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்திருப்பாள்....

■ தன்னை திட்டுவதற்கும், சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._


■ 3) உங்கள் மகனின் மனைவி எப்படிப் பட்ட பழக்க வழக்கம் மற்றும் குணமுடையவராக இருந்தாலும்.... 


 ■ அது உங்களை பாதிக்க வேண்டாம். 

அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.... 

■ உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,.... 

மனப் பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால்.... 

■ இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்._


■ 4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவு படுத்திக் கொள்ளுங்கள்.... 


■ நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும்... 

அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும்..


 ■ எந்த அவசியமும் இல்லை..

உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால்.....

■ உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.... 

பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள்..... 


■ மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப் பட வேண்டாம்... 

■ அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்._


■_5) உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.... 


■ இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை._


■ 6) உங்கள் பேரக் குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்....


■ குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று...... 


■ நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்._


■ 7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.... 

■ அது உங்கள் மகனின் கடமை. இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால்..... 

■ ■ ■  உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்.


■ 8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து இருக்காதீர்கள்..... 

■ உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.... 


■ உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால்..... 


■ இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்..... 


■ ● ■ இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்.


■ 9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.... 

நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.... 


■ உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட வேண்டாம்..... 

■ இறுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது......


■_10)உங்கள் பேரக் குழந்தைகள் உங்கள் சொத்தல்ல..... 

■ அது உங்கள் பிள்ளைகளின் விலை மதிப்பற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்....


■ எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும்  பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்._


■ மொத்தத்துல ஒரு கணவன் மனைவி , உனக்கு நானும், எனக்கு நீயும் என்ற எண்ணத்தோடு.....


 ■ உண்மையாகவும், நம்பிக்கையோடும் வாழனும் அப்போ ஏமாற்றம் அதிகம் இருக்காது.


■ அதையும் மீறி பிள்ளைகள்.. 

நம்மை.. கவனித்தால் சந்தோசமே... 


🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩

No comments:

Post a Comment