Friday, March 1, 2024

Personality Development campல் பயிற்றுவித்தது சுருக்கமாக


நம்முடைய நேர்மறை சிந்தனைதான் நம்மை மேம்படுத்தும் வழிகாட்டும்.


1)முதலாவதாக, நம்முடைய பழைய வெற்றிகளை நினைக்க வேண்டும். அது, மற்றவர்களுக்கு மிகச்சாதாரணமாக கூட இருக்கலாம். நம்மை பொருத்தவரை, அது மிகச்சிறந்த வெற்றி. அந்த வெற்றியை, நிச்சயம் நினைத்து பார்க்கவேண்டும்  இதுதான் சுய ஊக்குவித்தலின் முதற்படி.


2)இரண்டாவதாக, நாம் நம்மை நம்புவதற்கு உரிய சில சுயபிரகடனம்/ சங்கல்பங்களை உருவாக்கிக்கொண்டு அவற்றை பலமுறை சொல்லிப் பழக வேண்டும்.


3)மூன்றாவதாக, பிரபஞ்ச பேராற்றல் நமக்கு எப்பொழுதும் உதவத் தயாராக இருக்கிறது என முழுமையாக நம்ப வேண்டும்.


4)நான்காவதாக,மனம் நம்மை சோர்வடைய செய்வது எதற்காக? என ஆராய்ந்து அதன் வழியே செல்லாமல், சோர்வடைவது என்பது மனதின் ஒரு இயல்புதான் ....என எடுத்துக்கொண்டு அதை புறக்கணித்து விட்டு,நாம் இருக்கும் இடத்தை மாற்றி, அல்லது வெளியே சென்று வேறு வேலைகளில் ஈடுபடவேண்டும்.


5)ஐந்தாவதாக,வாழும் வாழ்நாட்களை நாட்களாக எண்ணிப்பார்த்து, நாட்களை மணிகளாக,..மணிகளை நிமிடங்கள் ஆக்கி, நிமிடங்களை நொடிகள் ஆக்கி(தோராயமாக நூறு ஆண்டுகள் என்றால் 36,500 நாட்கள்.....அதாவது தோராயமாக 8,76,000 மணி நேரங்கள்...)அதை  இந்த நொடியை சந்தோஷமாக்கப் போகிறோமா? அல்லது கவலைக்கு உட்படுத்த போகிறோமா? என்ற கேள்வியை மட்டும் எழுப்பிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால், நாம் எக்காலகட்டத்தில் இருக்கிறோம்? என்பதை உணர்ந்து சந்தோஷத்தை தேர்ந்தெடுப்பதே நம்முடைய புத்திசாலித்தனமாக இருப்பதை காணலாம்.இதற்கு அறிவார்ந்த புரிதல் தேவை.அவ்வளவுதான்...!


6)ஆறாவதாக, நல்ல புத்தகம்...நல்ல புத்தகம் மட்டுமே  (செல்போனை முற்றிலுமாக விலக்கி வைக்க வேண்டும்.. முடிந்தால் சுவிட்ச் ஆப் அந்த நேரத்தில் செய்தல் நல்லது) அதில் எந்த பக்கம் வேண்டுமானாலும் எடுத்து படிக்கலாம். அதன்மூலம் புத்துணர்ச்சி அடைவதை யாராலும் தடுக்க முடியாது.


7)ஏழாவதாக மனதை எங்கும் அலைய விடமாட்டேன் என்ற உத்திரவாதத்துடன், நல்லதொரு யூடியூப் சேனலை தேர்ந்தெடுத்து மோட்டிவேஷனல் வீடியோவை பார்க்கலாம்.


8)எட்டாவதாக, நம்முடைய குறிக்கோள் என்ன? அதை அடைந்த பிறகு நமக்கு என்னவெல்லாம் கிடைக்கப்போகிறது என்ற கற்பனையை கண்கள் மூடி எண்ண வேண்டும்.


9)ஒன்பதாவதாக, உடல்  அளவிலான தகுதியைப் பெற உடற்பயிற்சியையும், பசிக்கு நல்ல மிதமான ஆரோக்கியமான உணவையும்(வயிறு நிறைய எப்பொழுதும் சாப்பிடக்கூடாது) எடுத்துக்கொள்ள வேண்டும்.


10)பத்தாவதாக, மிக முக்கியமானது... நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று எண்ணுவது... 

உற்சாகம் பெறுவது.



🌷🌷

No comments:

Post a Comment