Thursday, February 29, 2024

சிவப்பு கொடி பசலை - தினம் ஒரு மூலிகை

 *


*சிவப்பு கொடி பசலை
இதன் தாவரவியல் பெயர்:Basella rubra Basellaceae உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் குடிப்பசலை விரல்களுக்கு நிறத்தை கொடுக்க மருதாணி முகத்தை பொலிவாக்க கற்றாழை தோளில் உள்ள நுண்கிருமிகளை அழிக்க மஞ்சள் அந்த வகையில் உதட்டுக்கு நிறத்தை கொடுக்க சிவப்பு கொடிபசலை தற்போதைய சுட்டெரிக்கும் வெயிலுக்கு குளிர்ச்சிக்கு பெயர் போன கொடி பசலை உகந்ததாக இருக்கும் கனிந்த கொடி பசலை பழங்களை விரல் நுனியில் சிதைத்து லிப்ஸ்டிக் போல உதடுகளில் பூசிக்கொள்ள சிவந்த நிறத்தை கொடுக்கும் இதன் பழங்களை வைத்து உதட்டில் சாயம் பூசிக்கொள்ளலாம் இதில் பலவகை உள்ளன கொடி பசலை. தரைப்பசலை. சிறுபசலை. செடி பசலை. குத்து பசலை. பெரும் பசலை. ஆற்றுப் பசலை. கரும் பசலை. செம்பசலை. வெள்ளை பசலை. பேய் பசலை. நற்பசலை என பல வகைகள் உண்டு இதில் கொடி பசலை தரை பசலை சிறு பசலை செடி பசலை இவைகள் மட்டுமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது சித்தர் பாடல்:போகம் மிகக் கொடுக்கும்‌ /போர் செய் கபம் பெருக்கும்/ஆகமதிற் றாகமன லைத்தணிக்கும்/மாகுடரின்மன்னு மலமிளக்கும்/மாறா தரிசை தரும்/தின்னுங் கொடிபசலை செப்பு/விளக்கம் .

கொடி பசலை சிகப்பு* விளக்கம் ஆண்மை தன்மையை பெருக்கும் கபத்தையும் அதிகப்படுத்தும் அதிக தாகத்தையும் அனலையும் தடுக்கும் பெருங்குடலில் சிக்குண்டு தவிக்கும் மலக்கழிவுகளை வெளியேற்றும் சுவையின்மையை போக்கும் குடிப்பசலை சாப்பிடுவதால் ஏற்படும் பலன் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் ரத்த விருத்திக்கு உதவும் குறைந்த கலோரிகளுடன் நிறைவான நுண்ணூட்டங்களை வழங்குவதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பசலை சிறந்த மூலிகை ஆகும் குளிர்ச்சி தன்மையுடையதால் மழைக்காலத்தில் பசலைக்கீரையின் பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது வெப்ப நோய்களை உடனடியாக வேரறுக்கும் தன்மை பசலைக்கு உண்டு ஏப்ரல் மே மாதங்களில் ஏற்படும் வேனல் கட்டிகளுக்கு இதன் இலையை நசுக்கி கட்ட விரைவில் பலன் கிடைக்கும் வயிற்றுப் புண்ணுக்கும் குணமாகும் தன்னைக் கொண்டு இருப்பதால் இதன் இலைச்சாற்றை ஒரு ஸ்பூனோடு சிறிதளவு வெண்ணெய் சேர்த்து உட்கொள்ளலாம் வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தலைவலிக்கு இதன் இலைகளை அரைத்து நெற்றியில் பற்று போடலாம் கசகசாவோடு இதன் இலைகள் அதன் தண்டுகளை சேர்த்து அரைத்து நெற்றியில் பூச நல்ல உறக்கத்தை கொடுக்கும். நன்றி.

No comments:

Post a Comment