Sunday, February 18, 2024

பூண்டு தொக்கு

 

தேவையான பொருட்கள்

பூண்டு  - 200 கிராம்

சின்ன வெங்காயம்  - 15

தக்காளி  - 2

தேங்காய் துருவல் -  3 ஸ்பூன்

பெரிய வெங்காயம்  - 1

மல்லித்தூள்  - ஒன்றரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒன்றரை ஸ்பூன்

சீரகத்தூள்  - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்

புளி  - நெல்லிக்காய் அளவு

கடுகு  - அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  -  சின்ன குழி கரண்டி அளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை

100 கிராம் பூண்டை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி  100 கிராம் பூண்டு ,சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கி தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி தனியாக ஆற வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வாசனை  வரும்வரை  வறுத்துக் கொள்ளவும்.

வதக்கி வைத்த தக்காளி ,பூண்டு, சின்ன வெங்காயம் ,வறுத்த தேங்காய் துருவல்  கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மீதி எண்ணெயை கடாயில் ஊற்றி கடுகு போட்டு தாளித்து நறுக்கிய ,பெரிய வெங்காயம் தட்டி வைத்த பூண்டு போட்டு  கோல்டன் பிரவுன் கலர் ஆகும் வரை வதக்கவும்.

பின்பு அதனுடன் மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் ,மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும் .

பின்பு அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து  இரண்டு நிமிடம் வதக்கி அதில் ஒரு டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து  ஊற்றி தேவையான அளவுக்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்தவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

மிகவும் சுவையான பூண்டு தொக்கு ரெடி

பூண்டு தொக்கு   மூன்று நான்கு நாட்கள் இருந்தாலும் கெட்டுப்போகாது .

சூடான சாதத்தில்   போட்டு பிசைந்து   சாப்பிட சூப்பராக இருக்கும் .

இட்லி ,தோசைக்கு  தொட்டுக்க ரொம்ப சூப்பரா இருக்கு இருக்கும் .

No comments:

Post a Comment