Sunday, February 18, 2024

நார்த்தங்காய் வெல்லம் இஞ்சி பச்சடி

தேவையான பொருட்கள்

நார்த்தங்காய் - 2

இஞ்சி - விரல் நீளத் துண்டு

பச்சைமிளகாய் - 2

வெல்லம் - 150 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

நல்லெண்ணெய் - குழிக்கரண்டி அளவு

மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்

தனி மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன்

கடுகு ,வெந்தயம் - தாளிப்பதற்கு சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

நார்த்தங்காயை இரண்டாக நறுக்கி உள்ளே இருக்கக்கூடிய விதை எல்லாம் எடுத்துட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

இஞ்சி ,பச்சைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெல்லத்தை மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு ,வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய இஞ்சி பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

சிறிது வதங்கியவுடன் நறுக்கிய நாத்தங்காய் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .

ஓரளவுக்கு வதங்கி கலர் மாறியவுடன் மல்லித்தூள் ,மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு கரைத்த புளித்தண்ணீர் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நார்த்தங்காய் நன்கு வெந்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்.

இதன் நார்த்தங்காய், வெல்லம் பச்சடிசாம்பார் சாதம் தயிர் சாதத்துக்கு சூப்பரா இருக்கும்.

No comments:

Post a Comment