Monday, February 26, 2024

ஓமவல்லி - வியர்வை சளியை அடித்து விரட்டும் அருமருந்து!


வெயில் காலத்தில் வியர்வையால் சளி ஏற்படும் அல்லது திடீரென வானிலை மாறும்போது ஒரு சிலருக்கும் சளி ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது ஆஸ்துமாவால் சளி என ஒவ்வொருவருக்கும் ஒருவகையில் சளித்தொல்லை, இருமல் போன்ற உபாதைகள் வந்துகொண்டே இருக்கும்.

ஒரு சிலருக்கு நெஞ்சு சளி அதிகம் இருக்கும். இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளை சரிசெய்யக்கூடிய ஒரு மருந்தை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து பருகலாம்.

தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை

ஓமவல்லி – 4

(இது சளி மட்டுமல்ல நெஞ்சு எரிச்சல், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், ரத்தத்தை சுத்தம் செய்யும், அழற்சி, சோர்வு, மூட்டு வலி, கை-கால் வலி என அனைத்தையும் குணப்படுத்தும்)

ஒரு தவாவில் வைத்து அதை வதக்க வேண்டும். தோசைப்போல் இருபுறமும் திருப்பிவிட்டு சிறிது நேரம் வதக்க வேண்டும். அதிகம் வதங்கக்கூடாது. இருபுறமும் வதங்கி வரவேண்டும்.

வதங்கிய பின்னர் எடுத்து பிழிந்தால், அதிலிருந்த அதிகளவில் சாறு வெளிவரும். பிழிந்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.

கல்உப்பு – ஒரு சிட்டிகை

தொண்டையில் உள்ள அழற்சி, கிருமி, நச்சுக்களை நீக்கும். கல் உப்புதான் பயன்படுத்த வேண்டும். தூள் உப்பு பயன்படுத்தக்கூடாது. கல்உப்பில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.

தேன் – ஒரு ஸ்பூன்

சாறு, தேன், கல் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இதை நாளில் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு நாளில் 2 முதல் 3 வேளை பருகலாம். காலையல் வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது அதிக பலன்களைத் தரும். 3 நாட்கள் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். நெஞ்சு சளியை போக்கக்கூடியது.

இந்த ஓமவல்லி இலையையும், துளசியையும் சேர்த்து கொதிக்கவைத்து தேன் கலந்து கசாயமாகவும் பருகலாம். அதுவும் சளித்தொல்லைக்கு நல்லது.

ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி என்று அழைக்கடுகிறது. ஓமவல்லி இலைகள் அல்லது கற்பூரவள்ளி இலைகள் என்றும் இந்த தாவரம் அழைக்கப்படுகிறது. இதை எளிதாக வீடுகளில் தொட்டியிலே வளர்க்கலாம்.

ஓமவல்லி அல்லது கற்பூரவள்ளி இலையில் நன்மைகள்

இது பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது.

பூஞ்ஜைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

இதற்கு வைரஸ்களை எதிர்க்கும் தன்மை உள்ளது.

சுவாச பிரச்னைகளை தீர்க்கும் வல்லமை கொண்டது.

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உட்பொருட்கள் உள்ளது.

காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.

அழற்சிக்கு எதிரானது.

பற்களில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கிறது.

தலைமுடி வளர்ச்சி மற்றும் சருமம் பளபளக்க உதவுகிறது.

விலங்குகள் மற்றும் பூச்சிக்கடியை குணப்படுத்த உதவுகிறது.

மலேரியாவுக்கு எதிரான தன்மை கொண்டது.

புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்டுத்த உதவுகிறது.

உடலில் செரிமானம் நன்றாக நடைபெற உதவுகிறது. இதன் விதை சித்த மருத்துவத்தில் செரிமான கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது.

இது ஆர்த்ரிட்டிக் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கிறது.

ஓமவல்லி இலைகளை நாம் அன்றாட பயன்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த பக்கவிளைவுகளையும் கொடுக்காது. அளவாக பயன்படுத்த வேண்டும். அதிகம் பயன்படுத்தினால், உடலில் சூட்டை அதிகரித்துவிடும். எனவே இதை செய்து பார்த்து நன்மை பெறவேண்டும்.



No comments:

Post a Comment