Saturday, February 10, 2024

தை அமாவாசை பித்ரு தர்ப்பணம்

தை அமாவாசை


நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான தை அமாவாசையன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜா, அனுமதி தருவார். 


யமத் தூதர்கள் நமது பித்ருக்களை பூலோகத்திற்கு அழைத்து வருவார்கள். பித்ருக்களும் அவரவர் சந்ததியினர் இல்லத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 


அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும்,  வருவார்களாம்.  எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். 


பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக  நம்பிக்கை. புராணத்தில் நான்கு இடங்களில் அன்னதானம் செய்ய நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.


1. கயா

2. காசி

3. திரிவேணி சங்கமம் (அலகாபாத்)

4. சேது (ராமேஸ்வரம்)


*தானத்தில் சிறந்தது அன்னதானம் :*


பித்ருக்களுக்கான கடனைச் சரியாக நிறைவேற்ற முடியாமல் இருப்பவர்கள், பித்ரு தோஷம், பித்ரு சாபம் எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக  நிவர்த்தி செய்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து அவர்கள் உங்களை வாழ்த்த சமுத்திரத்தில் பித்ரு தர்ப்பணமும் மற்றும் ஏழை மக்களுக்கு அன்னதானமும் செய்ய வேண்டும்.


பித்ரு கடனை நிறைவேற்றினால் நன்மைகள் வளரும் என்று சிவபெருமான் ஸ்ரீராமரிடம் கூறியிருக்கிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, தசரத சக்கரவர்த்திக்கும், ஜடாயுவுக்கும் எள்ளைத் தர்ப்பணம் செய்து பிதுர் பூஜை செய்தார்.


அப்போது, சிவபெருமான் ஸ்ரீராமரின் முன் தோன்றி, முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் அனைத்து பாவங்களும் நீங்கி, எல்லா நன்மைகளும் தேடி வரும் என்றார்.


அன்ன தானம், வஸ்திர தானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும். அன்னதானம் செய்வதால் நம்முடைய வாழ்க்கை வளம் பெறும். வருங்கால சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள்.


முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைத்து, அவர்களுடைய மனம் குளிர்ந்து, உங்களை ஆசீர்வதித்து, உங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய பல பிரச்சனைகளை காற்றோடு கரையும் கற்பூரம் போல, காணாமல் போகும்.


*🙏 நட்பும் நிகழ்வும் குழு 🙏*

No comments:

Post a Comment