Saturday, February 24, 2024

மாசி மகம் என்றால் என்ன


மாசி மகம்* என்றால் என்ன..... *மகாமகம்* என்றால் என்ன..... வேறுபாடு தெரிந்து கொள்வோமா......

மாசி மகமும், மகா மகமும்

பொதுவாகவே சூரியன் கும்ப ராசியில் இருக்கக்கூடிய மாசிமாதம் முழுக்கவே புனித நீராடலுக்கு மிக உயர்ந்த மாதம் என்று சொல்லப் பட்டாலும், மாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினம் மகம் நட்சத்திரத்தில் வருவதால், பௌர்ணமி நீராடல் என்பது மிக மிகத் தூய்மையானதாகவும், புண்ணியம் ஆனதாகவும் கருதப்படுகிறது. இப்பொழுது, குரு பகவான் கும்ப ராசியில் இருக்கிறார்.

இவர் சிம்ம ராசிக்கு வருகின்ற பொழுது, குருவும் சந்திரனும் ஒன்றாகச் சேர்வார்கள். இப்போது பார்வைத் தொடர்பு. அப்போது சேர்க்கை தொடர்பு. அப்போது அவர்கள் இருவரையும் சூரியன் கும்ப ராசியில் இருந்து பார்ப்பார். இந்த பௌர்ணமி தினமானது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். இதை “மகாமகப் பெருநாள்” என்று கொண்டாடுகிறோம். மகாமகத்தை பேச்சு வழக்கில் ``மாமாங்கம்’’ என்று கூறுகின்றனர்.

மாசி மகம் என்பது வருண பகவானுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக சிவபெருமான் வருணனுக்கு அருள் செய்த தினமாகும். தான் நலன் பெற்றதை போல் இந்த நாளில் புனித நீராடு வழிபடுபவர்களின் பாவங்களும் தோஷங்களும் தீர வேண்டும் என வருண பகவான் வேண்டிக் கொண்டதாலேயே இந்த நாள் புனித நீராடுவதற்கு உரிய நாளாக கருதப்படுகிறது. அதே போல் கோவில்களில் தீர்த்த உற்சவம் இந்த நாளில் நடத்தப்படுவதும் வழக்கமானது. மற்ற இடங்களில் நீராடுவதை விட கும்பகோணம் மகாமகம் குளத்தில் மாசி மகத்தன்று நீராடுவது சிறப்பானதாகும். மற்ற இடங்களில் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்காக அனைவரும் கங்கையில் சென்று நீராடுகின்றனர். ஆனால் அந்த கங்கையே தன்னுடைய பாவத்தை போக்கிக் கொள்ள மாசி மகத்தன்று கும்பகோணம் *மகாமகம் குளத்தில்* எழுந்தருளுவதாக ஐதீகம்.

கும்பகோணம் மகாமகம் குளத்தில் வருடந்தோறும் நடைபெறுவதை மாசிமக நீராடல் என்றும், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மாசி மகத்தை மகாமகம் என்றும் கொண்டாடுகிறோம். அதனால் கங்கையை விட புனிதமானது கும்பகோணம் மகாமகம் குளத்தில் நீராடுவது. மாசி மகத்தன்று நாட்டில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவங்களை போக்கி, புனிதத் தன்மையை புதுப்பித்துக் கொள்வதற்காக மகாமகம் குளத்தில் எழுந்தருள்வதாக ஐதீகம். அன்றைய தினம் மகாமகம் குளத்தில் நீராடுபவர்களுக்கு இந்த 9 நதிகளும் அனைத்து நலன்களையும் வழங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அனைவராலும் கும்பகோணம் சென்று மகாமகம் குளத்தில் மாசிமகத்தன்று நீராட முடியாது. இப்படி முடியாதவர்கள் வீட்டிலேயே நவநதிகளில் நீராடிய பலன்களை பெற முடியும்.

தெரிந்து கொள்ளுங்கள்......

No comments:

Post a Comment