Saturday, February 24, 2024

மனோரஞ்சிதம் செடி - தினம் ஒரு மூலிகை

 *


*மனோரஞ்சிதம் செடி* தாவரவியல் பெயர்:Cananga Odorata மனோரஞ்சிதம் இதற்கு எப்படி இந்த பெயர் வந்தது என்றால் இந்த பூவை நாம் எந்த பழத்தை நினைத்து முகர்ந்து பார்க்கின்றோமே அந்த பழத்தின் மனம் வரும் அதனால் தான் இதற்கு மனோரஞ்சிதம் என்ற பெயர் வந்தது தலைக்கு தேய்க்கும் எண்ணெய் காய்ச்சும் முறை: மனோரஞ்சிதம் பூ 20 வலம்புரி காய் 10 இடம் புரி காய் 10 கரும்பூலா 100 கிராம் சித்தகத்தி பூ 100 கிராம் வெந்தய பொடி 25 கிராம் பூண்டு இரண்டு பல் மிளகாய் வற்றல் இரண்டு பசும்பால் அரை லிட்டர்பொன்னாங்கன்னிசாறு1/2 லிட்டர் கரிசலாங்கண்ணி சாறு அரை லிட்டர் அவுரி இலை 25 கிராம் குப்பைமேனி இலை 25 கிராம் முசுமுசுக்கை 25 கிராம் நிலப்பனை கிழங்கு 50 கிராம் சோற்றுக்கற்றாழை ஜெல் 50 கிராம் செம்பருத்தி பூ 25 கிராம் மருதாணி இலை 50 கிராம் இவை அனைத்தையும் நான்கு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் நன்றாக காய்க்க வேண்டும் காய்ச்சும் போது ஒரு குச்சியை எடுத்து காய்ச்சும் எண்ணெயில் முக்கி நெருப்பில் காட்ட வேண்டும் அவ்வாறு காட்டும் பொழுது அதில் படபடவென்று சப்தம் வந்தால் காய்ச்சும் எண்ணெயில் தண்ணீர் இருக்கிறது என்று அறிய வேண்டும் .

No comments:

Post a Comment