Saturday, February 17, 2024

தலைவலி -ஒற்றைத் தலைவலி

35 விதமான காரணங்கள் உண்டு. 

மலச்சிக்கல், அதிக சூடு, முன் கோபம், தூக்கமின்மை, பிடிக்காதவர்கள் வீட்டில் இருப்பது, அதிக வேலை, போன்றவை பொதுவான காரணங்கள். 

தலைவலிக்கு சுக்கு பவுடரை வெண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். கடுகை தேவையான அளவு எடுத்து மிக்ஷியில் அடித்து சலித்து சுடுநீரில் குழைத்து நெற்றியில் பற்று போடலாம். சூடான சுக்கு காபி குடிக்கலாம்.

ஒற்றைத் தலைவலி 

தலையில் நீர் ஊற்றிக் குளிக்கும் பழக்கம் இல்லாதவர்கும், மலச்சிக்கல் உள்ளவருக்கும்,வேளைக்கு சாப்பிடாமல் பசி உள்ளபோது சாப்பிடாமல் தவிர்பதும், பசி இல்லாதபோது சாப்பிடுவர்களுக்கும், ஓய்வின்றி அலைபவருக்கும் வரும். ஒரே நேரத்தில் தலைவலி வரும். சிலருக்கு சூரியன் வந்து மறையும் வரை தலைவலி வரும்.

அவரவர் கைப்பிடி அளவு மிளகாய் வற்றல் எடுத்து இரவு படுக்கும் முன் வடிகஞ்சியில் ஊறப்போடவும்,விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து வடிகஞ்சியில் ஊறப்போட்ட மிளகாய் வற்றலை வெண்ணெய் போல் அரைத்து ஊறிய வடிகஞ்சியில் கரைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலை குளிக்கவும். ஒற்றைத் தலைவலி என்றால் எரிச்சல் இருக்காது. குளு குளு வென இருக்கும். இதை ஞாயிற்றுக்கிழமை தோறும் மூன்று ஞாயிறு செய்யவும்.  

மிளகாய் தேய்த்துக் குளித்த அன்று காலை வெந்தயக் கஞ்சி சாப்பிடவும். மதியம் ரசம் சோறு சாப்பிடவும், இரவு உணவை ஆறு மணிக்குள் சாப்பிடவும்.

பத்தியம் -முட்டை, மாமிசம் வகை ,இனிப்பு பலகாரங்கள், நெய், தயிர், மோர், வாழைப்பழம், வேர்கடலை இவைகளை தவிர்க்கவும்.


-மரு,சித்தன்.

No comments:

Post a Comment