Sunday, February 18, 2024

தக்காளி குருமா

 * - Tomato Kurma*

*சப்பாத்தி, பூரி, தோசைக்கு  தக்காளி குருமா.*


தேவையான பொருட்கள்


சின்ன வெங்காயம் - 10 - 15, நீளமாக நறுக்கியது

தக்காளி - 3, பொடியாக நறுக்கியது

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மஞ்சள்தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

தனியாதூள் - 1 டீஸ்பூன்

கரம்மசாலாதூள் - 1/2 டீஸ்பூன்

கொத்தமல்லி தழை - சிறிதளவு

பட்டை - 2 சிறிய துண்டு

கிராம்பு - 3

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


அரைக்க


தேங்காய்த்துருவல் - 1/2 கப்

கசகசா - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மிளகு - 1/2 டீஸ்பூன்

சீரகம் - 1/4 டீஸ்பூன்


இவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். 


செய்முறை


1. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். 


2. வெங்காயம் லேசாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். 


3. தக்காளி பாதி வதங்கியதும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியாதூள் சேர்த்து வதக்கவும். பின் கரம்மசாலாதூள் சேர்த்து கலந்து கொள்ளவும். 


4. இப்போது அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி அதோடு 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். 


5. பின் குருமாக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து மேலும் 1 கப் தண்ணீர் கலந்து மூடி வைத்து மிதமான சூட்டில் 1 விசில் வந்ததும் இறக்கவும். 


6. குக்கரில் இருக்கும் ஆவி அடங்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து மெதுவாக கலந்து பரிமாறும் பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். தோசை, சப்பாத்தி, பூரிக்கு தக்காளி குருமாவை நீங்களும் செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment