Tuesday, February 13, 2024

முதலில் நீங்கள் யாருக்குச் சிறந்தவராக இருக்க வேண்டும்

மூன்று தையற்காரர்கள் இருந்தார்கள். தொழிலில் நன்றாகத் தேர்ச்சியடைந்த பின் முன்னேற்றத்தைத் தேடி மூவரும்  ஒரு பெரிய நகரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். மூவரும் நகரின் பிரதான சாலையில் தகுந்த இடத்தை வாடகைக்குப் பிடித்து, தங்கள் தொழிலைத் தனித்தனியாகச் செய்யத் துவங்கினார்கள்.


அடுத்த நாள் காலை, முதலாமவன், தன் கடை வாசலில் கீழ்க்கண்டவாறு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்:


  *“உலகின் மிகச்சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”*


அதேபோல இரண்டாவது ஆசாமியும் தன் கடை வாசலில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகை ஒன்றை வைத்தான்.


   *“பிரபஞ்சத்தின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே இருக்கிறார்”*


இரண்டையும் கண்ணுற்ற மூன்றாமவன், திகைத்துப்போனான். அதே

போல தன் கடை வாயிலும் ஒரு அறிவிப்புப்  பலகை ஒன்றை வைக்க விரும்பினான். அத்துடன் தன்னுடைய கடைப்பலகை அவை

இரண்டையும் விட மேன்மை உடையதாக இருக்க வேண்டும் என்றும் விரும்பினான். பலமாக யோசனை செய்து, அடுத்த நாள் இப்படி ஒரு  அறிவிப்புப் பலகையை வைத்தான்.


*“இந்தத் தெருவின் மிகச் சிறந்த தையற்காரர் இங்கே கடை வைத்திருக் கிறார். ஒருமுறை தைத்துப் பாருங்கள்”*


யாரிடம் கூட்டம் சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


*மூன்றாவது ஆசாமியிடம்தான் கூட்டம் சேர்ந்தது!*


ஊர் உலகத்துக்கு நீங்கள் சேவை செய்வதற்கு முன்னாள் உங்களை சுற்றி உள்ளவர்களை கவனியுங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் என்ன செய்யப்

போகிறீர்கள் என்பதுதான் அதி முக்கியமானது. அதுதான் உங்களை தலைவனாக்கும்..

No comments:

Post a Comment