Wednesday, February 28, 2024

எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு



எண்ண அலைகளுக்கும் ஆற்றல் உண்டு. எண்ணங்கள் அலைகளாக மாறி நம் உடலிருந்து வெளியேறி நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் கலந்து அப்படியே எங்கும் பரவி விடுகின்றது.*_ 

யாரைப்பற்றி நினைத்தோமோ, சிந்தித்தோமோ, திட்டினோமோ, மகிழ்வுற்றோமோ அனைத்தும் அந்தந்த நபரின் ஆன்ம உடலைச்சுற்றி பரவிக்கிடக்கின்றது._ 

அந்த ஆன்ம உடல் சமநிலையடையும்போது அது தன்னைச்சுற்றியுள்ள அலைகளை கிரகித்து அந்தந்த அதிர்வுகளுக்கு ஏற்ப தாக்கம் கொள்கின்றது. உணர்வு பூர்வமாக இதை உணரமுடியும்.*_

மன்னன் ஒருவன் வீதியுலா வரும்போது மக்கள் அனைவரும் வணங்கினர். சந்தன வியாபாரி ஒருவனும் வணங்கினான். அவனிடம் நிறைய சந்தனமரங்கள் விற்பனையின்றி இருந்தன. அந்த வருத்தத்தில் யாராவது பெரியமனிதர்கள் இறந்தால்கூட எரிப்பதற்கு சந்தன மரங்கள் வாங்குவர் என வருந்திக்கொண்டே வணங்கினான். அதன் தாக்கம் அவன் வணங்கியபோது மன்னருக்கு என்னவோ போலிருந்தது. அவனைப் பார்த்து எரிச்சலடைந்தார்._

ஓரு நீதிமான் காரனமின்றி கோபம், எரிச்சல் கொள்ளக்கூடது என்ற நினைவிலிருந்து, இது பற்றி அமைச்சரிடம் கூறினார். உண்மைகளை விசாரித்து அறிந்த அமைச்சர் வியாபாரியிடமிருந்த சந்தனமரங்களை அரசரின் பிறந்த நாள்விழா யாகத்திற்கு என வாங்கினார்.*_  

மகிழ்வுற்ற வியாபாரி அடுத்தநாள் அரண்மனைக்கு சென்று, அரசரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் சந்தனமரங்கள் விற்பனையாகவேண்டும் என்ற நினைப்பில், அரசர் பல்லாண்டு வாழ்க! என வணங்கினான்._ 

அன்று அவனைப் பார்த்ததும் அரசருக்கு எரிச்சலுமில்லை, கோபமும் வரவில்லை. இனிய புன்முறுவல் கொண்டார். இது பற்றி அமைச்சரைக் கேட்டபோது அவர் நடந்ததைக் கூறினார்.”*_

எனவே நம்மைப்பற்றிய பிறரது நல்ல எண்ணங்கள் நமக்குள் மகிழ்ச்சியும் தீய எண்ணங்கள் வருத்தத்தையும் ஏற்படுத்தும்._ 

அந்தளவிற்கு எண்ணங்களின் அலைகள் நம் மனதை பாதிக்கின்றன. மற்றவர்களையும் பாதிக்கும். சொற்களில், செயல்களில் வன்முறையுடன் வாழ்பவர்கள் தாங்கள் சைவம் என்று சொன்னால்கூட பின்னாளில் அவர்கள் கூறிய சொற்களை அவர்களே உண்ண வேண்டி இருப்பதால் அவர்களும் அசைவம்தான்.*_

சைவம் அசைவம் என உணவில் இல்லை. சிகப்பு நிறம் கொண்ட இரத்தம் ஓடும் உயிரினங்கள் மற்ற உயிர்களைப் பிடித்து தின்ன ஆர்வம் காட்டுகின்றன. அது வக்ர எண்ணங்களை அதிகம் தூண்டுகிறது._

மான், குரங்கு, முயல் போன்றவைகள் சிகப்பு ரத்த ஓட்டத்துடனிருந்தாலும் அவை சைவ உணவுகளை அதாவது சிகப்பு இரத்தம் இல்லா பொருட்களை உணவாக கொள்கிறது.*_ 

ஆனால் மரம், செடி, கொடிகளுக்கும் இரத்த ஓட்டம் கொண்டுதான் அவைகள் உயிர்வாழ்கின்றன. ஆனால் அந்த இரத்தம் வெண்ணிறமுடையது._

பொதுவாக இரத்த ஓட்டங்கள் வெள்ளை அல்லது சிகப்பு நிறம் கொண்டுள்ளது, அவ்வளவுதான். உயிர் உள்ள இரத்தம் ஓடும் மரம், செடி, கொடிகளின் பொருட்களை சைவம் எனக்கூறினாலும் அதுவும் அசைவம்தான். அவை உயிர் உள்ளவற்றின் அங்கங்கள்.*_ 

அந்த பொருட்களும் வக்ர எண்ணங்களைத் தூண்டுபவையே!_

அதனால் மனிதன் உண்ணும் உணவில் ஏதுமில்லை. அவன் எண்ணும் எண்ணங்கள், அது நடைபெற முயற்சிக்கும் வழிமுறைகள்தான் வக்கிரமானவையாக இருக்கின்றது.*_  

அதனால் நல்ல வக்ரமில்லாத எண்ணங்களுக்காக மனதை பக்குவப்படுத்திக் கொள்ளல் வேண்டும்._

அதற்காக மனதை காலியாக வைக்க வேண்டும். தீய எண்ணமின்றி நல்லெண்ணங்களை நிரம்பி வழியச்செய்வோம். நல்லவண்ணம் வாழ உன்னை உன்னுள் தேடு.

No comments:

Post a Comment