Thursday, February 29, 2024

இந்தியாவிலேயே பாதுகாப்பான கார் எது..? Global NCAP என்பது என்ன..?

இந்திய மக்கள் அதிக பணத்தை முதலீடு செய்து வாங்கும் முக்கியமான விஷயங்களில் வீட்டை தொடர்ந்து 2வதாக இருப்பது கார். இன்றைய வாழ்க்கை முறையில் கார் தேவை என்பதை தாண்டி அவசியமாக மாற்றியுள்ளது, அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பின் கார்களின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாகவே தரவுகள் கூறுகிறது. கார் என்பது ஒரு வாகனம், ஒரு பொருள் என்பதை தாண்டி மிகப்பெரிய நிதியியல் முதலீடாக பார்க்கப்படுகிறது. ஒரு காரை நீங்கள் வாங்க வேண்டும் என்றால், டிசைன், பிராண்ட் போன்றவற்றை தாண்டி நிதியியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியவை உள்ளது.



கார் என்பது நிரந்தர சொத்துக் கிடையாது, ஒவ்வொரு வருடமும் இதன் வாங்கும் விலையை காட்டிலும் குறையும் என்பதை மறந்துவிடாதீர்கள். இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும் காரின் பாதுகாப்பு தான் முக்கியமான விஷயமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குளோபல் NCAP தரம் பெரிய அளவில் அங்கிகரிக்கப்படுகிறது.

குளோபல் என்சிஏபி அல்லது ஜிஎன்சிஏபி என்பது இங்கிலாந்து நாட்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனத்தின் தன்னார்வத் திட்டமாகும். உலகெங்கிலும் அறிமுகம் செய்யப்படும் கார்களின் விபத்து சோதனை செய்து அதன் தன்மையை வெளிப்படையாக அறிவிப்பது தான் இந்த அமைப்பின் நோக்கம். வாகன பாதுகாப்பு மதிப்பீட்டு பல வகையாக சோதனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.



உதாரணமாக ஒரு 64 KMPH வேகத்தில் செலுத்தி கனமான இடத்தில்
மோதவிடும் போது காரில் உள்ளே இருக்கும் மனிதர்கள், குழந்தைகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை அளிவிடும் முறை உள்ளது. இப்படி பல கோணத்தில் ஆய்வு செய்து மதிப்பிடப்பட்டும். 

இந்த வரையில் பாதுகாப்பான கார்கள் எது..? அதன் மதிப்பீடு என்ன..? 

1. வோக்ஸ்வாகன் விர்டஸ் / ஸ்கோடா ஸ்லாவியா (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
2. ஸ்கோடா குஷாக்/வோக்ஸ்வேகன் டைகன் (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 3. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
4. டாடா பஞ்ச் (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
5. மஹிந்திரா XUV300 (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
6. டாடா Altroz ​​(GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
7. டாடா நெக்ஸான் (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
8. மஹிந்திரா XUV700 (GNCAP மதிப்பீடு: 5 ஸ்டார்ஸ்) 
9. ஹோண்டா ஜாஸ் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
10. டொயோட்டா அர்பன் க்ரூஸர் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
11. மஹிந்திரா மராஸ்ஸோ (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
12. மஹிந்திரா தார் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
13. டாடா டைகோர் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
14. டாடா டியாகோ (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
15. மாருதி சுசூகி Brezza (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
16. ரெனால்ட் Kiger (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
17. ஹோண்டா சிட்டி 4வது தலைமுறை (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
18. நிசான் மேக்னைட் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 1
9. ரெனால்ட் ட்ரைபர் (GNCAP மதிப்பீடு: 4 ஸ்டார்ஸ்) 
20. கியா Carens (GNCAP மதிப்பீடு: 3 ஸ்டார்ஸ்)


Source : Good Returns

No comments:

Post a Comment