Tuesday, March 12, 2024

மனித வாழ்வில் மனசாட்சி.

மனசாட்சிக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள் . "மனசாட்சி இருந்தால் இப்படிச் செய்வீர்களா...?" இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்...*_


_“அது சரியில்லை என்று என் மனதிற்குத் தெரியும்,” அல்லது “நீங்க சொல்வதை என்னால் செய்ய முடியாது...!*_


_அது தவறென்று ஏதோவொன்று எனக்குள் சொல்லிக் கிட்டே இருக்கின்றது” என்று நீங்கள் எப்போதாவது கூறி இருக்கிறீர்களா...?_ 


_*அப்படிச் சொல்லி இருந்தால் அதுதான் உங்கள் மனசாட்சியின் “குரல்;”*_


_இது சரி அது தவறு என்று உங்களுக்குள் சொல்லுகிற, உங்களை ஆதரிக்கின்ற அல்லது உங்களைக் குற்றப்படுத்துகின்ற ஓர் உணர்வு..._


_*ஆம், மனசாட்சி என்பது நமக்குள் இயல்பாகவே இருக்கிறது. நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டுமென்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும்...*_


_நம்முடைய போக்கில் ஏதேனும் தவறு இருக்கிறதென நம் மனசாட்சி அல்லது உள்மனம் நமக்கு எச்சரிக்கை கொடுக்கலாம்..._


_*அந்த எச்சரிப்புக்குச் செவி சாய்ப்பது தவறான செயலால் வரும் கெட்ட விளைவுகளைத் தவிர்க்க மட்டும் அல்லாமல், நம்முடைய மனசாட்சி தொடர்ந்து தகுந்த முறையில் செயல்படுவதற்கும் உதவுகிறது...*_


_அமெரிக்காவின் ஜனதிபதியாவதற்கு முன்பு ஆபிராகம்லிங்கன் அவர்கள் வழக்கறிஞராகத் திகழ்ந்தார்..._


_*அவர் புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதற்குக் காரணமே அவரது நேர்மை தான்...*_


_உண்மைக்குப் புறம்பான எந்த வழக்கையும் ஏற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்..._


_*இதற்கு அவரிடம் காரணம் கேட்டதற்கு!,’*_


_''உண்மையில்லை என்று தெரிந்த ஒரு வழக்கை நான் வாதத்துக்கு ஏற்றால், ஒவ்வொரு வினாடியும் நான் பொய்யன் என்பதை என் மனசாட்சி உரக்கமாக சொல்லிக் கொண்டிருக்கும்’’ என்றார்..._



_*மனசாட்சி - நம் உண்மையான முகம்...! நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய உதவும்...!*_


_உங்களுடைய மனசாட்சி கொடுக்கும் எச்சரிப்புகளை அசட்டை செய்து விடாதீர்கள்...!!_


_*நம்முடைய மனசாட்சி நமக்கு உதவ வேண்டும் என்றால், நாம் அதற்கு செவி சாய்க்க வேண்டும். நாம் எல்லோருக்கும் மிகப்பெரிய நீதிபதி நம் மனசாட்சி தானே...!!!*_

No comments:

Post a Comment