Wednesday, March 13, 2024

இளநீர் - இறைவனுடைய படைப்பில் அற்புதம்

 *இளநீர்...* 

இன்று பெரும்பாலான மக்கள் ஆரோக்கியம் கருதி இளநீர் பருகி வருகின்றார்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் இளநீர் பருகுவது சரிதானா.

இறைவனுடைய படைப்பில் பல அற்புதங்கள்  உலகில் இருந்து வருகிறது அதில் ஒரு அற்புதம்தான் இளநீர்.

உடல் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி இருதயத்தை பாதுகாக்கும் ஒரு அற்புத பானம் இளநீர்.

 இதன் பலன் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமெனில் இளநீர் எப்போது பருக வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 இளநீர் பருகுவதற்கு சரியான நேரம் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தான் .

இந்த நேரத்தில் இளநீர் பருகுவது அதன் மருத்துவத் தன்மையை நாம் உடல் முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கு வழி வகை செய்யும்.

அந்த நேரத்தில்தான் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் D  முழுமையாக கிடைக்கும்.

இளநீர் அதன் மருத்துவ குணத்தை  முழுமையாக பெற அதற்கு விட்டமின் D அவசியமான ஒன்றாகும்.

மாறாக சூரியன் உதயமாவதற்கு முன்பாக வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும் குறிப்பாக வயிற்றில் புண் மற்றும் வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தி விடும்.

இன்னும் இளநீர் பருகுபவர்கள் அதன் தன்மையும் மருத்துவ குணத்தையும் அறிந்து முறையாகப் பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கோடை காலத்தில் அதிக அளவில் இளநீர் பருகுவது மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு விஷயமாகும்.

அறிந்து கொள்ளுங்கள் ஒரு உணவை மருந்து ஆக்குவதும் விஷம் ஆக்குவதும் நாம் அதைப் பயன்படுத்தும் முறையில் தான் உள்ளது.

No comments:

Post a Comment