Wednesday, March 13, 2024

வாஸ்து சாஸ்திரம்

1. தூங்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?


நாம் உறங்கும் திசை இயல்பாக கிழக்கு மேற்காக இருப்பது சிறப்பு. சூரியன் உதிக்கும் திசையில் தலைவைத்து உறங்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். இது ஆரோக்கியத்தை குறிப்பதாகவே குறிப்பிட்டுள்ளார்கள்.


2. சமையலறையில் சமைக்கும் திசை எப்படி இருப்பது சிறப்பு?


சூரியன் உதிக்கும் திசையில், கிழக்கு முகமாக நின்று சமைக்கும்போது, சூரிய வெளிச்சம் உள்ளே வரும் படியான அமைப்புகளில் நின்று சமைக்கும்போது சுத்தமாகவும், சுகாதாரமாகவும், சுவையான உணவாகவும் சமைக்க முடியும் என்று நமது முன்னோர்கள் ஆரோக்கியத்தை மையமாக வைத்து வலியுறுத்தி உள்ளார்கள்.


3. உணவருந்தும் திசை எப்படி இருப்பது சிறப்பு?


உணவருந்தும் திசை எக்காரணம் கொண்டும் வடக்கு முகமாக அமர்ந்து உணவருந்தக்கூடாது என்று நமது முன்னோர்கள் வலியுறுத்தினார்கள். காரணம் ஆயுளை மையமாக வைத்தே குறிப்பிட்டுள்ளார்கள்.


4. பூஜையறையில் சாமி படங்களை எப்படி இருப்பது சிறப்பு?


பூஜையறையில் உள்ள விக்ரகங்கள் சாமி படங்கள் வடக்கு முகமாக இருப்பது சிறப்பு. நாம் இறைவனை வணங்கும் போது வடக்கு முகமாகவோ, கிழக்கு முகமாகவோ நின்று பக்கவாட்டில் பிரார்த்தனை செய்யும் பொழுது, அந்த பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து நமது முன்னோர்கள் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார்கள்.


5. குழந்தைகள் படிக்கும் அறை எப்படி இருப்பது சிறப்பு?


குழந்தைகள் படிக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு முகமாக அமர்ந்து படித்தால் இயல்பாகவே ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நமது முன்னோர்கள் இதை வலியுறுத்தி உள்ளார்கள்.


6. கழிவறையின் கோப்பைகள் மற்றும் குளிக்கும் திசைகள் எப்படி இருப்பது சிறப்பு?


கழிவறையில் உள்ள கோப்பைகள் கிழக்கு மற்றும் மேற்கு முகமாக இருக்கும்பொழுது இறைவனை அவமதிப்பதாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் தெற்கு, வடக்காக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்கள். இதே விதிமுறைகள்தான் குளியலறைக்கும்.


7. வரவேற்பறையில் சோபாக்கள் மேஜைகள் எப்படி இருப்பது சிறப்பு?


நம் வீட்டினுள் நுழையும் விருந்தினரை எதிர்கொண்டு வரவேற்கும் பொழுது, நாம் நிற்கும் திசை இயல்பாகவே கிழக்கு-வடக்காக வரவேண்டும் என்பதை மையப்படுத்தி சோபாக்களையும், மேசைகளையும் மேற்கு முகமாகவும் தெற்கு முகமாகவும் அமைத்திருப்பார்கள்.


8. பணம் வைக்கும் பெட்டிகள் எப்படி இருப்பது சிறப்பு?


பணம் வைக்கும் அறை என்பது தென்மேற்கில் வரவேண்டும். அதிலும் குறிப்பாக பணம் வைக்கக்கூடிய பணப்பெட்டி அதாவது பீரோ லாக்கர் போன்றவை வடக்கு முகமாக இருப்பது சிறப்பு.

 உங்களுடைய வீட்டில்,கிழக்கு தலை வைத்து தினமும் தூங்கினால்,செல்வ வளம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;அப்படி அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது;எந்த ஒரு திருஷ்டியாலும் தடுக்க முடியாது;


மேற்கே தலைவைத்து தினமும் வீட்டில் தூங்கினால்,ஆயுள் அதிகரிக்கும்;


வடக்கே தலை வைத்து எப்போதும் தூங்கவே கூடாது;நோய்கள் வளரும்;மன நலம் பாதிக்கப்படும்;


தெற்கே தலைவைத்து வீட்டில் தினமும் தூங்கினால்,புகழ் அதிகரிக்கும்;


உங்களுடைய வீட்டில் கிழக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் கல்வி வளரும்;


மேற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் செல்வம் பெருகும்;


வடக்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் வளரும்;உடலின் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும்;


தெற்கு நோக்கி அமர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேவையற்ற வீண் பழிகள் வந்து கொண்டே இருக்கும்;


உணவகங்கள்,மெஸ்கள்,ஆஸ்டல்கள்,சாலையோர உணவகங்களில் சாப்பிடும் போது இந்த விதிகள் பொருந்தாது;


தெற்கு நோக்கி உங்கள் ஆடைகளை துவைத்தால் உங்களுக்கு வீண் சச்சரவுகளில் சிக்கும் சூழ்நிலை அடிக்கடி உண்டாகும்;


ஆண்டிராய்டு யுகமாக இருந்தாலும்,திசைகள் மாறுமா? சித்தர்கள் ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகள் இவை;நமது பாரம்பரிய பழக்கத்தை நாம் முறையாக பின்பற்றுவோம்;✍🏼🌹

No comments:

Post a Comment