Tuesday, March 12, 2024

இயற்கை மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை

முடி உடைத்தல், முடி உதிர்வு போன்ற குறையை நீக்கி முடி அடர்த்தியாக வளர ஒரு எளிய இயற்கை மூலிகை ஹேர் ஆயில் தயாரிக்கும் முறை*🪷


⚜️ *தேவையான மூலிகைகள்*⚜️


1.மரச்செக்கு தேங்காய் எண்ணெய் - 500ml

2.வெட்டிவேர் - 10கிராம் 

3.பூலாங்கிழங்கு - 10கிராம் 

4.மகிழம்பூ - 10கிராம் 

5.பொன்னாங்கண்ணி - 10கிராம் 

6.கரிசலாங்கண்ணி -10கிராம் 

7.பொடுதலை - 20கிராம் 

8.நீலி - 20கிராம் 

9.ஆவாரம் பூ - 20கிராம் 

10.செம்பருத்தி பூ - 20கிராம் 

11.திருநீற்றுப்பச்சிலை - 20கிராம் 

12.மலைநெல்லிக்காய் - 5

13.வெந்தயம் - 50 கிராம்

14.நன்னாரி - 10 கிராம்


⚜️ *செய்முறை விளக்கம்*⚜️


✍🏻தேங்காய் எண்ணெய் தவிர்த்து மற்ற மூலப்பொருட்களை நன்கு காயவைத்து கொள்ளுங்கள்


✍🏻காயவைத்தை அனைத்தையும் பாதி அளவு மைய அரைக்கவும் (பொடியாக அரைக்க கூடாது)


பின்,

✍🏻எண்ணெய்யை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரைத்த பொடியை நன்கு கொதிக்க வைக்கவும்


✍🏻எண்ணெய் பாதியளவு சுண்ட வைக்கவும், பின் இறக்கி 7 நாட்கள் குறைந்தது அப்படியே உறவைத்து பின் துணி கொண்டு வடி கட்டி கொள்ளுங்கள்


✍🏻தற்சமயம் அருமையான மூலிகை எண்ணெய் தயார்


⚜️ *பயன்படுத்தும் முறை*⚜️


👉ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு உறங்க செல்லும் முன்பு முடியின் ஆணி வேரில் எண்ணெயை தடவி இரவு முழுக்க ஊற வைத்து காலை தலைக்கு குளிக்கவும்


👉குறிப்பாக முன் நெற்றியில் தடவ முன் நெற்றி ஏறுதல் தடுக்கும்


⚜️ *இந்த எண்ணெயின் மருத்துவ நன்மைகள்*⚜️


▪️முடி உதிர்வு அடியோடு குறையும்

▪️முடி உடைத்தல் இல்லாமல் இருக்கும்

▪️முடி அடர்த்தியாக வளரும்

▪️பொடுகு,பேன் நீங்கும்

▪️முடி செழிப்பாக இருக்கும்


✍🏿முடியை பொறுத்தவரை முடி விழாமல் தடுத்தாலே அனைத்து குறையும் தீரும்


✍🏿ஆண்,பெண் அனைவரும் பயன்படுதலாம் வயது வரம்பு 50 வரை பலன் இருக்கும்.

No comments:

Post a Comment