Tuesday, March 12, 2024

செய்தி துளிகள் - 12/03/2024 (செவ்வாய்க்கிழமை)

  ⛑️⛑️சேலம் மாவட்டத்தில்  கடந்த 7 நாட்களில் 4500 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ப்பு!.

தமிழகத்திலே மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதில் சேலம் மாவட்டம் முதலிடம்.

⛑️⛑️பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் நேற்றே தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவிப்பு.

⛑️⛑️சர்வர் கோளாறு காரணமாக முனைவர் நுழைவுத்தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு என புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

⛑️⛑️மாணவர் திறன் மேம்பாட்டு போட்டிகள்: வழிகாட்டுதல்கள் வெளியீடு.

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு தொடர்பான உழைப்பூதியத் தொகையினை தேர்வு மையத்திற்கான வங்கி கணக்கில்: வரவு வைக்கப்பட்ட விபரம் தெரிவித்தல் - சார்பு அறிவிப்பு வெளியீடு.

⛑️⛑️தமிழக அரசுப் பள்ளிகளில் மார்ச் 25 முதல் 'நீட்' தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

⛑️⛑️மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளிலேயே ஆதார் பதிவு / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி (SOP) அரசாணை வெளியீடு.

⛑️⛑️வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோர் தகுதி சான்றுக்கு ஏப்., 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

⛑️⛑️TNPSC - குரூப் -4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் - ஒரு இடத்துக்கு 326 பேர் போட்டி

(நாளிதழ் செய்தி)

⛑️⛑️அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.இதில், சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார் டாவின் ஜாய் ரான்டால்ஃப்.

⛑️⛑️40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால்தான் மத்தியில் மாற்றம் நிகழும் எனவும், 5ஆவது முறையாக வெற்றிக்கூட்டணி தொடர்வதாகவும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

⛑️⛑️போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையை அழித்துவிடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

⛑️⛑️மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதில், மஹூவா மொய்த்ரா, கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான், கீர்த்தி ஆசாத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

⛑️⛑️திரிணமூல் காங்கிரஸ் அவசரமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட என்ன காரணம்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

⛑️⛑️தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவின் பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால், தேர்தல் ஆணையர் பதவி விலகுவது புதிதல்ல என பாஜக விளக்கமளித்துள்ளது.

⛑️⛑️புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

⛑️⛑️டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு உடற்தகுதி சான்று அளிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

⛑️⛑️3 விதமான கிரிக்கெட் தரவரிசைகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

⛑️⛑️விருதுகளை அள்ளிக்குவிக்கும் 'ஓப்பன்ஹெய்மர்'

சிறந்த துணை நடிகர், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவுக்காக 'ஓப்பன்ஹெய்மர்' படத்திற்கு ஆஸ்கர் விருது

ஓப்பன்ஹெய்மரில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டௌனி ஜூனியர், பெற்றார்.

⛑️⛑️சென்னையில் IPL டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை!

சென்னையில் IPL டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் மட்டுமே விற்க முடிவு

டிக்கெட் விற்பனை தேதிகள் குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என IPL நிர்வாகம் தகவல்.

⛑️⛑️சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைதண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️இதுதாங்க தமிழ்நாடு - புதிய மசூதி திறப்பு விழா - சீா்வரிசை கொடுத்த இந்துக்கள் - விருந்து வைத்து அசத்திய இஸ்லாமியர்கள்..!

⛑️⛑️சி.ஏ.ஏ சட்டம் - விஜய் எதிர்ப்பு

"இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல"

"சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் வாழும் சூழலில் பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சி.ஏ.ஏ"

"தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" - தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிக்கை.

⛑️⛑️2014 முதல் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் வேலூர் தொகுதியை ஒதுக்கக் கேட்டுள்ளோம். மேலும் ஒரு தொகுதி கேட்டுள்ளோம்.

கொடுத்தாலும், இல்லையென்றாலும் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு இருக்கும்

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பேட்டி

⛑️⛑️பாஜகவுக்கு அமமுக நிபந்தனையற்ற ஆதரவு''

தமிழகத்தில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவு

"இந்த சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என எங்களுக்கு பாஜக எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை" 

டிடிவி தினகரன்

⛑️⛑️NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்

NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன். பெல்ஜியத்தில் உள்ள இதன் தலைமை அலுவலகத்தின் வெளியே ஸ்வீடனின் தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

⛑️⛑️இன்சாட் 3-DS செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படத்தை வெளியிட்டது.

இஸ்ரோ அதிநவீன இமேஜஸ் சவுண்டர் பேலாேடுகள் மூலம் பூமியின் அளவு மற்றும் பன்முகத்தன்மையை படம் பிடித்து

இன்சாட் 3-DS இந்த தரவுகள் வானிலை முன்னறிவிப்புகள் வளிமண்டல இயக்கவியல் ஆகிவற்றை ஆராய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

⛑️⛑️குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது மத்திய அரசு

👉2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

👉4ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

👉பாகிஸ்தான் ஆப்கான் வங்கதேச நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்த சீக்கியர்கள் ஜெயின் பாரசீகம் இந்து உள்ளிட்ட மதத்தவர்க்கு குடியுரிமை.

 👉2014க்கு முன்பு வரை மத துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் வகை செய்கிறது.

👉2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்த தலையில் சிஏஏ சட்டத்தை நிறைவேற்றியது.

⛑️⛑️இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், இந்தியர்கள் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது. அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா அமல்படுத்துகிறது: 

மத்திய அரசு விளக்கம்

⛑️⛑️ஆஃப்கான், பாகிஸ்தான் & வங்கதேசத்திலிருந்து 31.12.2014க்கு முன்பு இந்தியா வந்த அந்நாட்டின் இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி & கிறிஸ்தவ சமூகத்தவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்கப்படும்:

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து 

மத்திய அரசு விளக்கம்

⛑️⛑️தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

⛑️⛑️முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிப் பெற்றுள்ளது.

பல்வேறு இலக்குகளை துல்லியமாக சென்று தாக்கிவிட்டு திரும்ப வரும் தொழில்நுட்பத்தின் மூலம் அக்னி-5 உருவாக்கப்பட்டது: 

பிரதமர் மோடி

⛑️⛑️பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு.

⛑️⛑️அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி இந்தியாவை இந்து நாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

⛑️⛑️சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ₹49,200க்கும் ஒரு கிராம் ₹6,150க்கும் விற்பனை.

⛑️⛑️26 நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

SBI வங்கிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

நாட்டிலேயே பெரிய வங்கியான SBI-யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா?

தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா?

நடைமுறை பிரச்சனைகள் என்றுக் கூறிக்கொண்டு இருக்காமல் உத்தரவை செயல்படுத்துங்கள்- உச்சநீதிமன்றம் காட்டம்.

⛑️⛑️தேர்தல் பத்திரங்கள் வழக்கில் இன்று மார்ச் 12க்குள் எஸ்பிஐ வங்கி ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

👉ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி SBI தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

⛑️⛑️இரட்டை இலை சின்னம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.

⛑️⛑️சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் பார்வையாளர்களுடன் தமிழ்நாடுத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

⛑️⛑️மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது : வைகோ வருத்தம்                                              ⛑️⛑️திமுக கூட்டணியில் மனநிறைவோடு தொகுதிப் பங்கீட்டை ஏற்று கொண்டுள்ளதாகவும், 2 தொகுதிகளிலும் தனிச் சின்னம்  வாங்கியுள்ளதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்.

⛑️⛑️புதிதாக 2 தேர்தல் ஆணையர்களை நியமிப்பது குறித்து வரும் 15ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை.

👉பிரதமர், அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இணைந்து தேர்ந்தெடுக்க உள்ளனர்.

No comments:

Post a Comment