Monday, March 4, 2024

நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறை சரியா?

இப்படிதான் குடிக்கணுமாம்.. ஆயுர்வேதம் சொல்கிறது...*   நாம் குடிக்கும் தண்ணீர் நம்முடைய உடலுக்கு முறையாக, முழுமையாக பயனடையவும் தண்ணீர் குடிக்கும்போது சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். அவை என்னென்ன என்று பார்ப்போமா...*உட்கார்ந்து தண்ணீர் குடிப்பது* உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும்போது நம்முடைய நரம்பு மண்டலமும் தசைகளும் ரிலாக்ஸாக இருக்கும். எளிதாக ஜீரணமாவதோடு சிறுநீரக பிரச்சினைகள் வராமலும் தவிர்க்க முடியும்.*ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது* கொஞ்சம் கொஞ்சமாக நாக்கில் படும்படி குடித்து விழுங்க வேண்டும். நம் ஒவ்வொருவருடைய உடலும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தன்மையில ஒன்றில் அடங்கும். அதன் தன்மைக்கு ஏற்ப தண்ணீர் குடிப்பது நல்லது. வாத உடலமைப்பு கொண்டவர்கள் உணவு அருந்தி ஒரு மணி நேரத்திற்கு பிறகு தான் தண்ணீர் குடிக்க வேண்டும். பித்த உடலமைப்பு கொண்டவர்கள் சாப்பிடும்போது இடையிடையே சிறிது சிறிதாக தண்ணீர் குடிக்கலாம். கப உடலமைப்பு கொண்டவர்கள் உணவு உண்பதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் குறையும். எடையும் குறையும். *சாதாரண வெப்பநிலை (அ) வெதுவெதுப்பான நீர்* ஐஸ் வாட்டர் வெயில் காலமாக இருந்தாலும் குடிக்கக் கூடாது. அது ஜீரண செயல்பாட்டை தடைபடுத்தும். உடலில் உள்ள கொழுப்புகள் மற்றும் பிறவற்றை எரிக்கும்போது ஐஸ் வாட்டர் குடித்தால் அந்த ஆற்றல் அமைதிப்படுத்தப்படும். அதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான நீரைக் குடிக்கும்போது ஜீரண சக்தி மேம்படுவதோடு மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்று வலி, வயிறு உப்பசம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்ப்பதோடு உடல் எடை இயல்பாகவே குறைய ஆரம்பிக்கும். *தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தல்* அவரவர் உடல் வாகுக்கு ஏற்ப தண்ணீரின் அளவும் மாறுபடும. அதனால் உடல் தண்ணீரின் தேவையை உணர்த்தும் போது (தாகம் எடுகு்கும்போது) தண்ணீர் குடிப்பதே நல்லது. *உடலுக்கு தண்ணீர் தேவையின் அறிகுறிகள்* நீர் பற்றாக்குறை ஏற்படும்போது நம்முடைய உடல் நமக்கு பல சமிக்ஞைகளை அனுப்புகிறது. அதில் மிக முக்கியமானது தாகம்.


சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளியேறுவது, (மஞ்சள் நிறம் நீர்ச்சத்து குறைபாட்டின் அறிகுறி)


உதடுகள் வறண்டு போதல் (நீர்ச்சத்து பற்றாக்குறையின் அறிகுறி) *காலை எழுந்ததும் தண்ணீர் குடித்தல்* காலையில் தண்ணீர் குடிக்கும் இந்த பழக்கம் நிறைய நோய்களை விரட்ட பயன்படுகிறது.


காலை நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை முற்றிலும் வௌியேற்றி குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. ***வெள்ளி அல்லது செம்பு பாத்திரம்* வெள்ளி மற்றும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதன் மூலம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. செம்பில் (copper) நிறைய ஆன்டி - ஆக்சிடண்ட்டுகளும் ஆன்டி பாக்டீரியல் தன்மையும் அதிகமாக இருக்கின்றன. இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.

அதோடு இவற்றில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. அதேபோல வெள்ளிப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் அது உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்ஸை அழித்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.  *வெயில் காலத்தில் பின்பற்ற வேண்டியவை* வெயில் காலத்தை ஆயுர்வேதத்தில் பித்த காலம் என்றும் குறிப்பாக மதிய நேரத்தை பித்த நேரம் என்றும் என்றும் அழைப்பார்கள். வெப்ப காலம் என்பது பொருள். அதனால் தான் இந்த காலகட்டத்தில் உடலின் வெப்பநிலையை குறைக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டுமென ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

வேண்டுமானால் நீங்கள் குடிக்கும் வழக்கமாக தண்ணீருடன் பித்தத்தை தணிக்கும் எலுமிச்சை, புதினா, பெருஞ்சீரகம், கசகசா, ரோஜா இதழ்கள் போன்ற பொருள்களைச் சேர்த்து குடிக்கலாம்.

No comments:

Post a Comment