Wednesday, March 13, 2024

சாயா சோமேஸ்வரர் - தெலுங்கானா

சாயா சோமேஸ்வரர்கோயில் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த சிவன் கோயில் ஆகும் . 


தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் பனகல் என்னும் ஊரில் சாயா சோமேஸ்வரர் கோயில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. 


இங்குள்ள லிங்கத்திற்கு பின்புறம் ஒரு தூணின் நிழல் விழுகிறது. நிழலில் என்ன அதிசயம் என்றால், காலைமுதல் மாலை வரை அந்த நிழல் நகர்வதே கிடையாது. அதோடு இரவு நேரத்தில் கூட அந்த நிழல் மறைவதே கிடையாது.


 பொதுவாக சூரியன் நகர நகர நிழலும் நகர்ந்துகொண்டே போகும் அது தான் உலக நியதி. அனால் இங்கு சூரியன் உதித்ததில் இருந்து மறையும் வரை அந்த நிழல் நகராமல் ஒரே இடத்தில உள்ளது. இந்த கருவறைக்கு முன்பு நான்கு தூண்கள் உள்ளன. அனால் கருவறையில் விழும் நிழல் எந்த தூணிற்கானது என்று கண்டறியவே முடியவில்லை. எந்த தூணிற்கு பக்கத்தில் நாம் நின்று பார்த்தாலும் தூணின் நிழல் மட்டுமே கருவறையில் விழுகிறதே தவிர நமது நிழல் விழுவதில்லை. ( சாயா என்றால்  நிழல்  என பொருள்படும்).

No comments:

Post a Comment