Friday, June 7, 2024

கழுகிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்

 *...*கழுகு*

பறவை இனத்திலேயே கழுகு மட்டும் தான் 70 ஆண்டு ஆயுட்காலம் வாழக் கூடியது. கழுகு, பறவை இனத்தில் அதிக உயரம் பறக்கக் கூடியவை.


அழகிய அலகு மற்றும் கண்கள், கூர்மையான நகங்கள் கொண்ட கால்கள் மற்றும் இலகுவான இறக்கைகள் உண்டு.


கழுகு

பார்வை


எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் நிலத்தில் உள்ள உயிரனங்களை தெளிவாகப் பார்க்கும் கூர்மையான கண் பார்வை உடையவை. கழுகின் பார்வை மனிதனின் பார்வையை விட நான்கு மடங்கு நுட்பமானது. இதனால் அது ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், தரையில் ஓடும் ஒரு முயலைக் கண்டு வேட்டையாட முடியும்.


கழுகின் விருப்பம்


கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களுக்கு மேலாக எளிதில் பறக்க முடிகிறது. இதனால், அவை சிறகினை விரித்து காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றன இதனை கழுகுகள் பெரிதும் விரும்புகின்றன.


ஆண் கழுகுக்கு இனச் சேர்க்கைக்கு முன் பரீட்சை


பெண் கழுகு ஆண் கழுகின் மீது பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அந்த ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்துச் சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டு விட்டு காத்துக் கொண்டிருக்கும்.


நிலத்தை நோக்கி வீழ்ந்துக் கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழு முன் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் சேர்க்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டு விடும். ஆண் கழுகு பிடிப்பதற்காக கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல மணி நேர பரீட்சை நடைபெறும். பெண் கழுகு ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டதும் அது உறவு கொள்ள இடமளிக்கும்.


கழுகு கூடு


கழுகு மிக உயரமான கூறான முற்களை உடைய மரக்கிளைகளில் அல்லது பாறை பிளவுகளில், மற்ற உயிரினங்கள் எளிதில் நெருங்க முடியாத இடத்தில் கூடு கட்டும், இடம் தேர்வானதும் ஆண் கழுகு முள், குச்சி, புல், வேர்கள், சிறு கற்கள் மற்றும் வைக்கோல் வைத்து லாவகமாக கூடுகட்டும். பின் பெண் கழுகு முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுப் பொறிக்கும்


ஆபத்துக் காலங்களில் கெந்த அமிலம்


எதிரிகளைத் தாக்கவும் தன்னுடைய முட்டைகளைப் பாதுகாக்கவும் ஆபத்து நேரங்களில் உடலிலிருக்கிற கந்தக அமிலத்தைக் கழுகுகள் உமிழ்கின்றன. கந்தக அமிலம் எந்த ஓர் உயிரினத்தின் மீது பட்டாலும் கருகிவிடும்.


கழுகு குஞ்சுகளுக்குப் பயிற்சி...


குஞ்சுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கூட்டில் வைக்கப்பட்டு தாய் பறவை உணவு ஊட்டும். பிறகு மென்மையான கூட்டினை நீக்கி விட்டு முட்கள் குச்சுகளைக் குத்துவது போல வைக்கும் இதனால் கூட்டின் ஓரத்திற்க்கு வரும் குஞ்சுகளை கீழே தள்ளிவிடும்.குஞ்சுகள் நிலைதடுமாறி விழப் போகும் போது இறக்கைகளை விரித்துப் பறக்க முயலும். ஆனால் பறக்க முடியாது குஞ்சுகள் கீழே விழுந்து அடிபடாமல் ஆண் கழுகு பறந்து சென்று தன் முதுகில் தாங்கி மீண்டும் கூட்டிற்க்கு கொண்டு வந்து சேர்க்கும். இது போல் தொடர்ந்து பயிற்சியளித்து குஞ்சுகளைப் பறக்க வைத்து இறை தேடும்.


இவ்வளவு கெத்தா வாழும் கழுகின் சோகமான வாழ்க்கை 40 வயதிற்கு பின் தான் ஆரம்பமாகும் என்பது தான் வேதனையே..


40 வது வயதில் கழுகின் மறுபிறவியும், சோதனையும் வேதனையும்


கழுகு தன் 40 வயதை அடையும் போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயனற்றதாகிவிடும். அதன் அலகும் வளைந்து விடும். அதன் இறக்கைகளும் தடித்து, பறப்பதற்குக் கனமாக மாறிவிடும். இந்த நிலையில், ஒன்று இறப்பது அல்லது வலிமிக்க நிகழ்ச்சிக்குத் தன்னையே உட்படுத்துவது இவை தான் கழுகுக்கு இருக்கும் இரண்டு வாய்ப்புகள்.


இந்தக் காலத்தில், கழுகு உயர்ந்த மலைக்குப் பறந்துச் சென்று அங்கிருக்கும் பாறையில் தன் அலகைக் கொண்டு வேகமாக மோதி அலகை உடைக்கும். புதிய அலகு வளரும் வரை தான் கூட்டிலேயே தனித்திருக்கும். புதிய அலகு வளர்ந்த பின் இறகுகளைத் தானே பிய்த்தெடுக்கும். ஐந்து மாதங்களுக்குப் பின் புதிய இறகுகள் முளைக்க ஆரம்பிக்கும். இந்த மாற்றத்துக்குச் சுமார் 150 நாட்கள் ஆகும். அத்தனை நாட்கள் காத்திருந்து, வலியை அனுபவித்து, மறுபிறவி அடைந்த கழுகு இன்னும் 30 ஆண்டுகள் வாழத் தகுதியுள்ளதாக மாறும்.


கேள்வி : வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?


இந்தக் கேள்வியின் அடிமட்டம் வரை சென்று நான் வாழ்ந்திருக்கிறேன். காசு, பணம் இல்லாமல், முகவரி இல்லாமல் தனிமையில் அழுதுப் புலம்பி, நாள் ஒன்றிற்கு இரண்டு கோதுமை தோசை மட்டும் இரவு உணவாக எண்ணி எண்ணி சாப்பிட்டு, காலையில் ஒரு தேநீர் மட்டும் என வாழ்ந்து, உடைந்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். I Became Nothing. I Was Completely Broken.


கழுகை பற்றி அன்று முதன் முதலில் வாசிக்க ஆரம்பித்தேன். கழுகு தன் அழகை இழந்து, ஒவ்வொரு இறகாகப் பிய்த்துக் கொள்ளுமாம். அப்படி பிய்த்துக் கொள்ளும் போது அதன் உடலில் ரத்தம் சொட்டுமாம்.வேதனை தாங்க முடியாதாம் அந்த கழுகால். உயரத்தில் பரந்த அந்த கழுகு மலையின் உச்சிக்குச் சென்று தன்னைத் தனிமைப்படுத்தி வாழுமாம்.


சில நாள் கழித்து அதன் உடம்பில் மீண்டும் இறக்கைகள் முளைக்க ஆரம்பிக்குமாம். அப்படி முளைத்தப் பின் அந்த கழுகு தான் முந்திப் பறந்த உயரத்தை விட உயரம் பறக்குமாம்.


கேள்வி : வாழ்க்கையில் இனியும் எந்த ஊக்குவிப்பும் இல்லை என உணரும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?


கழுகைப் போல் என் நேரத்திற்காக பொறுமையுடன் காத்திருப்பேன். அந்த காத்திருப்பின் காலத்தில் என் பலத்தை புதுப்பித்துக் கொள்வேன். (I Will Renew My Strength)


ஆம், அதைத் தான் செய்தேன்…..


அப்புறம் என்ன இப்ப ராஜ வாழ்க்கை தான். ஒரே மகிழ்ச்சியும் ஆனந்தமும் தான் போங்க. ஒரு மனுஷன் 24/7 சந்தோஷமாகவே இருக்க முடியுமா? என்று அனைவரும் ஆதங்கப்படும் அளவிற்கு மிக மிக அழகான, ஆனந்தமான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். தேவைகள் சந்திக்கபட்டு தினம் தினம் மீதம் எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.... சும்மா ஜம்முனு வாழுறேன். குறைவின்றி மிக நிறைவாக. காத்திருங்கள்... உங்களுக்கான நேரம் கண்டிப்பாக ஒருநாள் நிச்சயமாக வரும்.

No comments:

Post a Comment