Tuesday, June 18, 2024

செய்தித் துளிகள் - 18.06.2024(செவ்வாய்க்கிழமை)


📕📘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

📕📘பணிக்கு தாமதமாக வருவோர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை: அனைத்து துறைகளுக்கும் ஒன்றிய அரசு அதிரடி உ

த்தரவு

📕📘பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.

📕📘பிளஸ் 2 துணைத் தேர்வு: ஹால்டிக்கெட் ஜூன் 19-ல் வெளியீடு.

📕📘சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு: எளிதாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து.

📕📘தமிழக அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உயர் கல்வி வழிகாட்டி பாடவேளை அறிமுகம்

📕📘சென்னை ஐஐடியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுப் பகுப்பாய்வு பிரிவில் பிடெக் படிப்பு அறிமுகம்.

📕📘வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் - மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளி கல்வி இயக்குநர் ஆகியோரின் இணைச் செயல்முறைகள் வெளியீடு.

                                📕📘நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்                                                                         📕📘Hi-tech lab களில் புதிதாக பணியில் சேர்ந்த கணினி பயிற்றுநர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி SPD அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.                                  (EMIS  பணி மேற்கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ITK VOLUNTEERS)

📕📘வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டி என அறிவிப்பு.

📕📘4 Overs Maiden + 3 W - வரலாற்று சாதனை! 

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ரன் கூட கொடுக்காமல் 4 ஓவர்களையும் மெயிடன்களாக வீசி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லக்கி பெர்குசன் வரலாற்று சாதனை.

👉பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 4 ஓவர்கள் மெயினடாக வீசியதோடு 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார் பெர்குசன்.

📕📘வயநாடு மக்களின் அன்பை மறக்கமாட்டேன் என ராகுல்காந்தி உருக்கம்.

ரேபரேலி, வயநாடு ஆகிய 2 தொகுதி மக்களுமே என் மனதுக்கு நெருக்கமானவர்கள். 

வயநாடு தொகுதி மக்களின் அன்பை மறக்கமாட்டேன். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவேன்”

வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவிக்கும்போது ராகுல் காந்தி பேச்சு.

📕📘இந்தியாவில் 58.1% பணபரிமாற்றம் டிஜிட்டல் மூலம் நடக்கிறது:

குலோபல் டேட்டா நிறுவனம் தகவல்

📕📘போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா

📕📘ரயில் விபத்து - மனித தவறே காரணம்

மேற்குவங்க ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம்

சிக்னலை ஓட்டுநர் அலட்சியம் செய்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்

📕📘மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து கவலை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

ரயில்வே அமைச்சர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்

பிரதமர் மோடி

📕📘சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

ஒரு கிராம் தங்கம் ரூ.6,690க்கும், சவரன் ரூ.53,520க்கும் விற்பனை                                              📕📘உலகின் தலைசிறந்த நிறுவனங்களின் பட்டியலில், முதல் 100 இடங்களுக்குள் இந்தியாவைச் சேர்ந்த 4 நிறுவனங்கள்...

👉46ஆவது இடத்தில் டிசிஎஸ்

👉47ஆவது இடத்தில் ஹெச்டிஎப்சி

👉73ஆவது இடத்தில் ஏர்டெல்

👉74 ஆவது இடத்தில் இன்போசிஸ்

📕📘நெல்லை மாஞ்சோலையை தமிழ்நாடு அரசு எடுத்து நடத்த வேண்டும்

👉"மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மூடுவது என்பது தீர்வாக இருக்காது;

👉தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும்;

👉மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தரமான வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்;

👉தற்போது கொடுக்கப்படும் நிதி அவர்களுக்கு  போதுமானதாக இருக்காது"

சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

📕📘ரயில் விபத்து துரதிஷ்டவசமானது

போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது 

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

📕📘தலைவர்கள் சிலை -நாடாளுமன்றத்தில் புதிய பூங்கா

👉பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்கள் சிலைகள் அகற்றப்பட்ட விவகாரம்

👉புதிய நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகள் ஒரே இடத்தில் நிறுவப்பட்டு, பூங்கா அமைப்பு

👉`பிரேர்னா ஸ்தல்' எனும் புதிய பூங்காவை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திறந்து வைத்தார்

👉மகாத்மா காந்தி, அம்பேத்கர், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது

📕📘தேர்தலில் வெல்லதல்ல எங்கள் கனவு.

மக்கள் இதயங்களை வெல்வது தான் எங்கள் கனவு

சீமான்

📕📘விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்

. மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

📕📘ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் சீருடை மற்றும் பேட்ஜ் அணிய வேண்டும்

. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவு

,

No comments:

Post a Comment