Tuesday, June 18, 2024

நஞ்சறுப்பான் - தினம் ஒரு மூலிகை

 

 *நஞ்சறுப்பான்

இலை வேர் கைப்புச் சுவையும் வெப்ப தன்மையும் கொண்டவை வியர்வை பெருக்கும் கோழை அகற்றும் விச நஞ்சுக்களை முறிக்கும் வாந்தி உண்டாக்கும் உலர்ந்த வேர்கள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக் குழல் அழற்சிக்கு பயன்படுகிறது இது நீண்ட சதை நிறைந்த வேர்களை உடைய சுற்றி படரும் கொடிவகை தாவரமாகும் கரி பாலை நஞ்சு முறிச்சான் குடி கொடி பாலை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு நஞ்சை வெளியேற்ற இலைகளை நன்கு அரைத்து எலுமிச்சம்பழம் அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும் அல்லது இலை வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு இரண்டு தே

க்கரண்டி அளவுடன் சிறிது அளவு மிளகுத்தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்க கொடுக்க வேண்டும் இலையை உலர்த்தி பொடித்து அரை கிராம் வெந்நீரில் நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வியர்வை பெருகும் சளியை போக்கும் சீத கழிச்சல் நீர்த்த கழிச்சல் தீரும் மேற்கண்ட பொடியை அரை கிராம் அளவாக நாள்தோறும் மூன்று வேளை நீடித்து கொடுத்து வர மேக வாய்வு பிடிப்புகள் தீரும் நன்றி

No comments:

Post a Comment