Saturday, June 15, 2024

கிராமத்து சிக்கன் குழம்பு

 **

தேவையான பொருட்கள்

சிக்கன் -   3/4  கிலோ

பெரிய வெங்காயம் -2

தக்காளி - 2 

முந்திரிப் பருப்பு - 5 

மஞ்சள் தூள் -  அரை ஸ்பூன்

நல்லெண்ணெய்  - 6  ஸ்பூன்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2  ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு


வறுத்து அரைக்க தேவை

யான பொருட்கள்


வரக்கொத்தமல்லி - 6  ஸ்பூன்

காய்ந்த மிளகாய்-  10

சின்ன வெங்காயம் -  15

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1  ஸ்பூன்

சோம்பு - 1  ஸ்பூன்

அரிசி - 1  ஸ்பூன்

பட்ட - 2  துண்டு

 கல்பாசி - 2  துண்டு

ஏலக்காய் - 2 

 கிராம்பு - 3 

தேங்காய் துருவல்-  கால் மூடி


சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


கடாய் அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, போட்டு சிறிது வறுத்து விட்டு மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி அனைத்தும் சேர்த்து நன்கு வாசனை வாசனை வரும் வரை வறுக்கவும்.


பின்பு அதனுடன் சின்ன வெங்காயமும் சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் அரிசியும் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.


இந்த மசாலா பொருட்களை வறுக்கும்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.


வறுக்கும் போது  மசாலா கருகாமல் பார்த்துக் கொள்ளவும்.


பின்பு இதை ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து   நைசாக அரைத்துக் கொள்ளவும்.


முந்திரி, தேங்காய் இரண்டையும் ச தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு கலர் மாறும் வரை வதக்கவும்.


பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 1  நிமிடம் வதக்கி விட்டுதக்காளியும் சேர்த்து நன்கு மசிய வதக்கவும்.


அதனுடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து சிறிது வதக்கி விட்டு  சிக்கனையும் சேர்த்து  ஒரு நிமிடம் வதக்கவும்.


பின்பு அதனுடன் சிக்கனுக்கு தேவையான அளவுக்கு உப்பு,   4 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கடாயை முடி அடுப்பை 15 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.


சிக்கன் நன்கு வெந்தவுடன் அதனுடன் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து கலந்துவிட்டு குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.


குழம்பு நன்கு கொதித்து தேங்காயின் பச்சை வாசனை போனவுடன் மல்லி இலை தூவி இறக்கினால் மிகவும் சுவையான கிராமத்து ஸ்டைல் சிக்கன் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment