Thursday, June 13, 2024

செய்தித்துளிகள் - 13.06.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*

 உண்மையாய் இருப்பதால் தான் அதிகம் காயப்படுகிறோம்...

உரிமையாய் இருப்பதால் தான்

அதிகம் கோபப்படுகிறோம்...

நேர்மையாய் இருப்பதால் தான் அதிகம் சோதிக்கப்படுகிறோம்.!

நம்முடைய கண்ணீரை யாரும் பார்க்கமாட்டார்கள்...

நம்முடைய கவலைகளை யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்...

நம்முடைய வலியை யாரும் உணரமாட்டார்கள்...

ஆனால்,நம்மை அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டால் அதை  

விமர்சிக்க அனைவரும் வரிந்துகட்டி வந்து விடுவார்கள் இதுதான் வாழ்க்கை.!!



அன்பால் ஏமாந்தவர்கள் ஒருபோதும் அழிந்ததும் இல்லை...

அன்பை வைத்து ஏமாற்றியவர்கள்

இறுதிவரை நன்றாக வாழ்ந்ததும் இல்லை.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

*செய்தி துளிகள்*



 2024 சட்டமன்றப் பேரவை - உத்தேச நிகழ்ச்சி நிரல் - 24.06.2024 அன்று பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை

📕📘வட்டார கல்வி அலுவலர் (BEO) பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பொறியியல் படிப்பு நேற்று ரேண்டம் எண் ஒதுக்கீடு.                           👉இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவங்குகின்றது.

📕📘அன்பாசிரியர் 2023' விருது: விண்ணப்பிக்க ஜூன் 25 வரை அவகாசம் நீட்டிப்பு.

📕📘உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கைக்கு யுஜிசி அனுமதி.

📕📘பிடெக் பாடத்திட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது சென்னை ஐஐடி.

📕📘அரசு ஊழியர் புதிய மருத்துவ காப்பீடு திட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: ரூ.10 லட்சம் வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

📕📘ஆசிரியர்களுக்கு கைக்கணினி (Tab) வழங்குதல், ஸ்மார்ட் போர்டு,10,12ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி  பெற்ற அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பாராட்டுதல் விழா உள்ளிட்ட ஐம்பெரு விழா - 14.06.2024 அன்று சென்னையில் நடைபெறுகிறது - DSE செயல்முறைகள் வெளியீடு.

📕📘SCERT Errata Letter - பாட புத்தகத்தில் வகுப்பு வாரியாக நீக்கப்பட வேண்டிய, சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள் வெளியீடு - Director Proceedings வெளியீடு.

📕📘DSE - பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

📕📘பணிநிரவல் விதித் தளர்வுக்கு பெரிதும் வரவேற்பும் - பாராட்டுதலும் கிடைத்துள்ளது.

📕📘பள்ளிக்கல்வி - 2023-24ஆம் ஆண்டிற்கான 01.08.23 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தமை மற்றும் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல்  பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்றுகளை அளிக்காவிட்டால் அடுத்த மாதத்தில் இருந்து ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

📕📘Part Time Teachers Job-அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் பகுதி நேரமாக கலைகள் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமனம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

📕📘TNPSC - குரூப்-4 தேர்வில் குளறுபடி-தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்.

📕📘இன்று 13.06.2024  இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணிடத்திற்கு ஏற்ப முதல் கட்டமாக பணிநிரவல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள் மட்டும் நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு..                        👉மலை சுழற்சி கலந்தாய்வு               இன்று நடைபெறுகின்றது.

📕📘நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கும் அன்புமணி வலியுறுத்தல்

நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூடி அறிவிப்போம் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.

📕📘"சந்திரபாபு நாயுடு போல நீட் தேர்வுக்கு எதிரானவர்கள் பாஜக கூட்டணி அமைச்சரவையில் இருப்பதால் இந்தாண்டு நீட் தேர்வு முடிவுக்கு வரும்"

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

📕📘பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தேர்வு செய்யும்  உரிமையை பெற்றோரின் அன்பு கட்டுப்படுத்தாது"

 -கேரள உயர்நீதிமன்றம்

வாழ்க்கை துணையை தாங்களே தேர்வு செய்யலாம்"

18 வயது நிரம்பிய பிள்ளைகள் தங்களின் வாழ்க்கை துணையை தாங்களாகவே தேர்வு செய்துகொள்ளும் உரிமையை பெற்றோரின் அன்பும், அக்கறையும் கட்டுப்படுத்தாது என கேரள உயர்நீதிமன்றம் கருத்து

மதத்தை காரணம் காட்டி 27 வயது மகளின் காதலை அவரின் தந்தை ஏற்க மறுத்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கருத்து. 

தனிநபரின் விருப்பத்தை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது

📕📘தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர 2.54 லட்சம் பேர் விண்ணப்பம்: ஜூலை 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியீடு.

📕📘மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி,தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்.

📘📕தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி தொடங்கும் நிலையில், பேரவை நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .                     

📕📘குவைத் தீ விபத்து - முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்

அயலகத் தமிழர் நலத்துறைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

📕📘வயநாடு தொகுதியே ராகுல் காந்தி ராஜினாமா செய்தால்

கேரள மக்கள் வருத்தப்படக்கூடாது.

அவரைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு தர வேண்டும்

ஏனென்றால் அவர் இந்த தேசத்தை  காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்

கேரள காங்கிரஸ் தலைவர் சுதாகரன்

📕📘ஒடிசா முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்.

ஒடிசா முதல்வராக பாஜகவின் மோகன் சரண் மாஜி பதவியேற்றுக் கொண்டார்.

மோகன் சரண் மாஜிக்கு ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்பு.                                                  📕📘வெளியுறவுத்துறை இணையமைச்சர் குவைத் பயணம்.

குவைத் தீ விபத்தில் இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ள நிலையில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் பயணம்.

தெற்கு குவைத்தின் மங்கஃப் பகுதியில் தொழிலாளர்கள் தங்கி இருந்த கட்டடத்தில் தீவிபத்து.

50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 2 பேர் தமிழர்கள் என்றும் முதற்கட்ட தகவல்.

📕📘பரிதாபகரமான நிலையில் ரயில் சேவை - தயாநிதி மாறன் கண்டனம்

முன்பதிவு பயணிகள் பயணிக்க முடியாதது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்லாது, பாதுகாப்பு பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடியது

ஹவுரா ரயில் பயணிகளின் புகார் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து தெற்கு ரயில்வே விசாரணை நடத்த திமுக எம்.பி. தயாநிதி மாறன் வலியுறுத்தல்

📕📘தமிழர்கள் என்றால் புத்திசாலிகள்,

உழைப்பாளிகள்,

நன்றியுள்ளவர்கள், நாணயமானவர்கள்.

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

📕📘கோவையில் வரும் 15ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழாவுக்கு தொண்டர்கள் திரண்டு வர திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வென்றது போல் 2026 சட்டமன்ற தேர்தலில், 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்

200 தொகுதிகளுக்கு மேல் வெற்றியினை உறுதி செய்திட கோவை முப்பெரும் விழா ஊக்கமளிக்கும் இடமாக அமையட்டும்

மேற்கு மண்டலம் தங்களின் பட்டா நிலம் என நினைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை வஞ்சித்து சில கட்சிகள் அரசியல் லாபம் தேடின. அந்த கட்சிகளின் உண்மையான நிலையை, திமுக கூட்டணிக்கு அளித்த வெற்றி வாயிலாக மேற்கு மண்டல மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள். அதனால் தான் கோவையில் முப்பெரும் விழா நடைபெறுகிறது என்றார்.

📕📘இன்று இத்தாலி செல்கிறார் மோடி.!

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இன்று பிரதமர் மோடி இத்தாலி பயணம்

இத்தாலி பிரதமரின் அழைப்பை ஏற்று 

பிரதமர் மோடி பயணம், 3வது முறையாக பிரதமர் பதவியேற்ற பிறகு முதல் முறையாக வெளிநாட்டு பயணம்!.                          📕📘ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

உங்கள் தலைமை ஆந்திர மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வரட்டும் 

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இடையேயான பிணைப்பு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்

📕📘ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெறும்;

ஜூன் 20-ம் தேதி இரங்கல் தீர்மானம்;

ஜூன் 21 முதல் 29-ம் தேதி வரை துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்  

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அறிவிப்பு

📕📘நான் ஜெயித்த ரேபேரேலி,வயநாடு இரண்டில் எதை ராஜினாமா செய்வது என்பதை மக்களிடம் கேட்டு முடிவு செய்வேன்

ராகுல்காந்தி எம்.பி

📕📘தோழமைக் கட்சிக்கும், எங்களுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை

திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் வலிமையாகவும், உண்மையாகவும் இருக்கிறது

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை

📕📘முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின்  முதல்வராக  தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். 

விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பிரதமர் மோடி, அமித் ஷா, ஓபிஎஸ், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.                📕📘உக்காந்த இடத்தில் இருந்தே எல்லாவற்றையும் கணிக்க கூடியவர் கலைஞர் 

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவில் 

நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

📕📘ராணுவ தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம்

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக உபேந்திர திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜுன் 30ம் தேதி இவர் பொறுப்பேற்கிறார்.

📕📘சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,680க்கும், சவரன் ரூ.53,440க்கும் விற்பனை

📕📘பெண்களிடம் மன்னிப்பு கேட்டார் ராகுல் காந்தி

ஆட்சியமைக்கும் அளவிற்கு இடங்கள் பெறாததால் மாதம் ரூ.8500 தரும் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு ஏற்படவில்லை. அதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை ஆட்சியமைத்து நிச்சயமாக நிறைவேற்றுவோம் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

📕📘ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’

ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரக பகுதிகளில்

 ‘மக்களுடன் முதலமைச்சர் திட்டம்’ செயல்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 இத்திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 15 துறைகள் சார்ந்த மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட உள்ளது.

இம்மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment