Tuesday, June 25, 2024

செய்தித் துளிகள் 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

 

🍒🍒இந்த மாதம் 30.06.2024  உடன் பணி நிறைவு பெறவுள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அறிவொளி அவர்கள்,மாண்புமிகு முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உள்ளாட்சித் தேர்தல் பணியின் போது இறப்பு / காயம் ஏற்படும் தேர்தல் பணியாளர்களின் (Polling Personnel) வாரிசுகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு.

🍒🍒வினாத்தாள் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்: வந்தது புது சட்டம்.!

🍒🍒கணினி பயிற்றுநர்களுக்கு பணிவரன்முறை ஆணை வழங்கியமை - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் தெளிவுரை வெளியீ

டு.

🍒🍒தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.21.56 கோடியில் விடுதிக் கட்டடம் கட்டப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சீர்மிகு சட்டப்பள்ளி மாணவர்களுக்கு 50% அரசு நிதி, 50% பல்கலை. நிதி பங்களிப்புடன் விடுதி கட்டப்படும் எனவும் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யில் ரூ.3 கோடியில் மாணவர் மற்றும் ஆசிரியர் பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

🍒🍒பள்ளி மாணவிகளுக்கான ‘அகல் விளக்கு திட்டம்’

 -சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு

👉9 - 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் 'அகல் விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.

உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும்,

இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும்.

🍒🍒நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்..

தற்போதைய நீட் தேர்வு நடைமுறை பெரும் ஊழலுக்கு வழிவகுப்பதாக உள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநிலங்களே நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

நீட் தேர்வு என்பது வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது. 

2017க்கு முன்பு இருந்த மருத்துவ மாணவர் சேர்க்கை முறை சுமூகமானதாக இருந்தது.

மம்தா பானர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர்

🍒🍒பழைய ஓய்வூதியத் திட்டம், 8வது ஊதியக் குழு, ஓய்வூதியத்தை மாற்றியமைத்தல், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு மற்றும் பிற முக்கியப் பிரச்சினைகள்: 2024-2025 பட்ஜெட்டில் பரிசீலிக்க JCM FMக்கு அனுப்பிய செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 ஆட்டத்தில் அமெரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி.

🍒🍒கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1,983 கன அடி தண்ணீர் திறப்பு.

🍒🍒தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் இன்று  பதவியேற்பு.

🍒🍒வினாத்தாள் கசிவால் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு.

🍒🍒மீண்டும் பயன்படுத்தக்கூடிய “புஷ்பக் விண்கலம்” சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு.

🍒🍒ஜாமீன் நிறுத்தி வைத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு.

🍒🍒விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்ப பிரச்சனை; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு.

🍒🍒தைவான் சுதந்திரம் பற்றி தீவிர நிலைப்பாடு கொண்டோருக்கு மரண தண்டனை - சீனா.

🍒🍒இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.

🍒🍒20 ஓவர் உலகக் கோப்பை

சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா

வருகின்ற 27ம் தேதி அரையிறுதி போட்டியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

🍒🍒அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ஆம் தேதி செம்மொழி தமிழ் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஜனவரி 25-ம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

🍒🍒சிறைவாசிகள் உறவினர்களிடம் பேச விரைவில் காணொலி தொலைபேசி வசதி அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

2023-24-ல் சிறைவாசிகளுக்கான தொலைபேசி வசதி அழைப்பு மாதம் 10 முறை என உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

🍒🍒டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஜாமீன் உத்தரவின் நகல் இல்லாமல் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது தவறு என்றால்,அதே தவறை உச்சநீதிமன்றமும் செய்ய விரும்பவில்லை என நீதிபதிகள் கருத்து

இதற்கிடையில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்தால்,அதை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவிப்பு

🍒🍒சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டி இழுத்துச்சென்றதில் படு காயம் அடைந்த பெண் மதுமதியின் கால் அழுகியதால் அவரது மருத்துவ செலவுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கணவர் வினோத் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்

🍒🍒மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜேபி நட்டா மாநிலங்களவையின் பாஜக தலைவராக நியமனம்

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹புதிதாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப 6 புதிய பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


 தமிழக சட்டப்பேரவையில் அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள் பின்வருமாறு..


அச்சுதொழில்நுட்பம், வேதியியல் தொழில்நுட்பம், தோல் தொழில்நுட்பம் மற்றும் நெசவு தொழில்நுட்பம் ஆகிய 4 சிறப்பு பயிலகங்களில் புதிதாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப 6 புதிய பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். 2025-26 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப் படுத்தப்படும்.


கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 பேர் தங்கும் வகையில் ரூ.21 கோடியில் ஆண்கள் விடுதி கட்டடம் கட்டப்படும்.


ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 200 பேர் தங்கும் வகையில் ரூ.14 கோடியில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.


சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 300 பேர் தங்கும் வகையில் கூடுதல் விடுதிக் கட்டடம் கட்டப்படும்.


கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கப்படும்.


ரூ.8.55 கோடி மதிப்பீட்டில் மாணவியருக்கு தனி ஓய்வறை கட்டிடம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் அமையும். தனி ஓய்வறை தலா ரூ.5 லட்சம் வீதம் 171 கல்லூரிகளில் கட்டப்படும்.


ரூ. 3 கோடி மதிப்பீட்டில் செயற்கை நுண்ணறிவு எந்திரனியல் ஆய்வகம் கோயம்புத்தூர்,சேலம் மற்றும் பர்கூர் ஆகிய இடங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.பலவிதமான பயிற்சி திட்டங்கள் பட்டறைகள் (workshops) மற்றும் படிப்புகளை வழங்கும்.


ரூ.3 கோடி மதிப்பீட்டில் மின்சார வாகன தொழில்நுட்ப ஆய்வகங்கள் திருநெல்வேலி, தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ. 1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


மின்சார வாகன மின்கலன்கள் மற்றும் மின்கல மேலாண்மை அமைப்புகள், மின்னேற்றி, உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், பொருட்களின் இணையம் மற்றும் தானியங்கி வாகன மின்னணுவியல் ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துரிதப்படுத்தப்படும்.


காரைக்குடி மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் உள்ள 2 அரசு பொறியியல் கல்லூரிகளில் பொருட்களின் இணையம் ஆய்வகம் (Internet of Things Laboratory), ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.


பொருள் சேர் உற்புத்தி ஆய்வகங்கள் [ Additive Manufacturing Laboratory }வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள 3 அரசு பொறியியல் கல்லூரிகளில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்


ரூ.77 லட்சம் மதிப்பீட்டில் போட்டித்தேர்வுளுக்கு தீவிர பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பொறியியல் பட்டதாரிகளின் முதுகலை படிப்பை ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்புகளை விரிவுப்படுத்தவும் ஒரு மாணாகர்களுக்கு ரூ. 8500 ஒதுக்கப்படும்.


GATE, IES, CAT, GMAT, GRE, IELTS, TOEFL போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 500 லிருந்து 1400 ஆக உயர்த்தப்படும்.


2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில் துவங்கப்பட்ட 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளிலிருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 அரசுக் கல்லூரிகள் ஆகியவற்றிற்க்கு கொள்முதல் செய்யப்படும்.

ஆசிரியர்கள், மாணாக்கர்களுக்கு ஆகியோருக்கு இருக்கைகள், வகுப்பறைகளுக்கு செராமிக் கரும்பலகைகள் ஆகிய தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும்.

தொழில்நுட்ப கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை மேம்படுத்த ரூ.2 கோடியில் அமைக்கப்படும்.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹நேற்று 24.06.24 சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கையில் 25 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.


*+++++++++++++++++++++++++*


*1. அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை ரூ.58 கோடி மதிப்பில் தரம் உயர்த்துதல்.*


*2. சாரண சாரணியர் இயக்க வைர விழா, கலைஞர் நூற்றாண்டு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.*


*3. காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கல்வி, ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.*


*4. ரூ.2 கோடியில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சிகள் அளிக்கப்படும்.*


*5. 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் கற்றுக் கொடுக்கப்படும்.*


*6. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும்.*


*7. எந்திரனியல் (ROBOTICS)ஆய்வகங்கள் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 பள்ளிகளில் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.*


*8. பல்வகை திறன் பூங்கா, ஒரு மாவட்டத்திற்கு ஒரு பல்வகை திறன் பூங்கா என ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.*


*9. ஒன்பது முதல் 12-ம் வகுப்பு மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி பள்ளிக்கு வர அகல் விளக்கு திட்டம் அமல்ப்படுத்தப்படும்.*


*10. 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்கப் பள்ளிகளுக்கும் கலைத் திருவிழா விரிவாக்கம் செய்யப்படும்.*


*11. உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் கல்விச்செலவை ஏற்றல் – ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.*


*12. தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.*


*13. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தகை சால் நிறுவனமாக தரம் உயர்த்தப்படும்.*


*14. ரூ.3.15 கோடி செலவில் ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பயிற்சி அளிக்கப்படும்.*


*15. இரண்டாம் கட்டமாக இவ்வாண்டு 1000 ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி வழங்கப்படும்.*


*16. உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருளை மாணவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க நன்னெறி செயல்பாடு செயல்படுத்தப்படும்.*


*17. தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்திற்கு ரூ.6 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படும்.*


*18. பார்வைத் திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கான கணினி எழுத்துணறி மென்பொருள் உருவாக்கப்படும்.*


*19. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.*


*20. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் நூலகங்களுக்கான புதிய சேவைகள், ரூ.5 லட்சம் மதிப்பில் அறிமுகப்படுத்தப்படும்.*


*21. வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க விருது தரப்படும்.*


*22. திசை தோறும் திராவிடம் திட்ட விரிவாக்கம். பிற இந்திய மொழிகள், வெளிநாட்டு மொழிகளுக்கு விரிவுபடுத்தப்படும்.*


*23. மிளிரும் தமிழ்நாடு என்ற பெயரில் புகைப்பட ஓவிய நூல்கள் 50 லட்சம் மதிப்பீட்டில் பரிசு பதிப்புகளாக வெளியிடப்படும்.*


*24. பட்டய கணக்காளர் ( CA) தேர்வு நூல்கள், 30 லட்சம் மதிப்பில் வெளியிடப்படும்.*


*25. இணையவழியில் பாடநூல் கழக நூல்களின் விற்பனையை தேசிய, சர்வதேச அளவில் ரூ.20 லட்சம் மதிப்பில் விரிவுபடுத்துதல்.*

No comments:

Post a Comment