Wednesday, June 26, 2024

முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால

 #ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...

10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.😍😍

❤கோலம் போட்ட தெருக்களும்.,

சீரியல் பல்பு தோரணமும்.,

புனல் ஸ்பீக்கரில் ஓடும்.

❤️நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து

போட்டு செய்வோம்..


❤️பந்தி முதல் பந்தல் வரை சலிக்காம பாப்போம்...


❤️விடிய விடிய பாக்காத உறவுகளுடன் பேசி தூங்காம,கோலமும்,மருதாணியும் வெப்போம்...


❤️வீட்டில் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.


♥பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.

அதுல குழந்தைகளும் பெண்களும்

உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க.

சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.


♥பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு,வீட்டுக்கதைகள் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.


♥சாப்பாட்டு பந்தியில்

வெளியாட்களை பாக்கவே முடியாது.

உறவுகளே பரிமாறினார்கள்.

நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.


❤️பொண்ணு மாப்பிள்ளை போனாலும்

நாம் ஊர் திரும்ப மனசு வராது.

மனசு நெறைய சந்தோசத்துடனும்,

கனத்துடனும் திருப்புவோம்.


இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.


ஆனா இன்னிக்கு?????????????????????


இந்த பழக்கம் எங்க போச்சுங்க?....

யார் மாத்துனது? ஏன்?


❤️காலை 6 மணி முகூர்த்தத்துக்கு

7 மணிக்கு போனா போதும்,

பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.

எனக்கு லீவ் இல்ல..

லோன் கட்டனும்...

அவருக்கு ஆபீஸ் மீட்டிங்.

யப்பா எத்தனை காரணங்கள்?!...


இதெல்லாம் போக...

எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்,உறவின் புரிதலும்..


♥இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.


❤️இன்றைய கல்யாண வீடுகளில் கூட 1நாள் கூட யாரும் தங்குவதில்லை.

இப்படி இருந்து நீங்க என்ன சாதிச்சீங்க?

உறவுகளை இழந்ததுதான் மிச்சம்.

No comments:

Post a Comment