Wednesday, June 26, 2024

செய்தித்துளிகள் 26.06.2024 ( புதன்கிழமை)

🟥🟦ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 2026 ஜனவரி மாதத்திற்குள் 46,534 பணியிடங்கள் நிரப்பப்படும்.

👉தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,591 பேருக்கு வேலைவாய்ப்பு.

👉ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,000, மருத்துவத்துறையில் 3,041 பணியிடங்கள் நிரப்பப்படும்.

👉காலியாக இருக்கும் மற்ற பணியிடங்களையும் சேர்த்து 75 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவி

ப்பு.

🟦🟥இந்த கல்வியாண்டு முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா நடத்தப்படும் என தகவல் 

🟥🟦அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ரூ.42 கோடி செலவில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என சட்டசபை மானிய  கோரிக்கை விவாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

🟥🟦இணையதள இணைப்பு பெற்றிருந்தும், கம்ப்யூட்டர்கள் எப்போது வரும் என, அரசு பள்ளி ஆசிரியர்கள் பல மாதங்களாக காத்திருக்கின்றனர். கம்ப்யூட்டர்கள் வராததால், மாதம், 1,500 ரூபாய் இணையதள கட்டணம் வீணாவதாகவும், ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

🟥🟦தமிழகம் முழுவதும் வேலையின்றி தவித்த 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட பி.எட். கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை  தமிழக சட்டசபையில் நிறைவேறியது. சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் பாடப்பிரிவை நீக்கியிருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

🟥🟦இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் அவர்கள் திட்டத்தினுடைய பணிகள் முடித்து, வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்களை மீண்டும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் பள்ளிக்கு திரும்ப அனுப்ப உள்ளார்கள்.

🟥🟦மாவட்ட ஆசிரியர்  கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தைத் தகைசால் நிறுவனமாகத் தரம் உயர்த்தப்படும் என தகவல்.

🟦🟥போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சியில் மாணவர் சேர்க்கை 500 லிருந்து 1400 ஆக உயர்வு: அமைச்சர் பொன்முடி

🟦🟥G.O 140 - 8 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை சரண் - 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதி - அரசாணை வெளியீடு.

🟦🟥டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாமக்கல்லில் தொடங்கியது.

🟥🟦நீட் தேர்வில் சரியான திட்டமிடல் இல்லை’

உரிய திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழித்த பாஜக அரசின் போக்கு கண்டனத்திற்குரியது

நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் எழுப்பப்பட்ட குரல் இன்று இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

நீட் தேர்வு முறைகேடுகளால் தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்

🟥🟦TNPSC மூலம் குரூப் -1 பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பணியாளர்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🟥🟦மருத்துவத்துறை மருத்துவர்களுக்கும், பல் மருத்துவர்களுக்கும் வழங்கப்படும் பதவி உயர்வை கால்நடை மருத்துவர்களுக்கும் வழங்குவதுதான் சமூக நீதி. அதை மதித்து கால்நடை மருத்துவர்களுக்கான பதவி உயர்வு தொடர்பான கால்நடை பராமரிப்பு துறையின் பரிந்துரையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

🟥🟦தொடக்கக் கல்வி இயக்ககம்(DEE)

👉2024-25 ம் கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையின் படி

EMIS ல் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் [SENIORITY LIST],அனைத்து மாவட்டத்தின் 385 ஒன்றியங்களிலும் உள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மூலம் நேற்று 25.06.2024 செவ்வாய் கிழமை வெளியிடப்பட்டது.ஆசிரியர்கள் தங்களுக்கான SENIORITY  ஐ உறுதி

செய்து கொள்ளவும். ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் 26-06-24 TO 28-06-24 க்குள் Individual Emis Login Id ல் சென்று  SENIORITY CHALLENGE CLICK  செய்து சரி செய்யவும். 29-06-24 சனிக்கிழமை இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்படும். 01-07-24 முதல் கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறும்.

🟥🟦பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், ஏப்ரல் - 2024 மறுகூட்டல் / மறுமதிப்பீடு முடிவுகள் வெளியிடுதல் குறித்த செய்திக்குறிப்பு  வெளியீடு.

🟥🟦2015-2016 முதல் 2022-2023ஆம் ஆண்டுகளில் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு.

🟥🟦முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.

🟥🟦டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு -இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!

🟥🟦மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

🟥🟦மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி நடப்புக்கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

🟥🟦கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் நிச்சயம் சந்திப்பார் என ஆர்.எஸ்.பாரதி தகவல்.

🟥🟦சென்னை மருத்துவர் குகானந்தம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

🟥🟦மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் நம்பகத்தன்மை பெரிய கேள்விக்குறியாகிவிட்டது - கனிமொழி எம்.பி.

🟥🟦தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 125% கூடுதலாக பெய்துள்ளது - வானிலை ஆய்வு மையம். 

🟥🟦மாநிலங்களவை முன்னவராக பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தேர்வு.

🟥🟦கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றுவதற்கு அம்மாநில பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்.

🟥🟦நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆதரவு. 

🟥🟦சவூதி அரேபியா: மெக்காவில் வெப்ப அலை தாக்குதலுக்கு இதுவரை 1301 பேர் உயிரிழந்தனர்.

🟥🟦டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்.

🟥🟦ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

🟥🟦2024 டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. 

🟥🟦நாளை 27ம் தேதி நடக்க உள்ள டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

🟥🟦இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்குத் தேர்தல்

சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட பாஜக எம்பி ஓம் பிர்லா மற்றும் காங்கிரஸ் எம்பி கே சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தனர்

🟥🟦மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு

-காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு

🟥🟦காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் இன்று அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும்"      மக்களவை சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் கொறடா எம்பிக்களுக்கு உத்தரவு

🟥🟦கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தலைமைச் செயலாளர்,டிஜிபிக்கு உத்தரவு

🟥🟦தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது"

*இடைக்கால உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம்

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து,  உச்சநீதிமன்றத்தில் வழக்கு

தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - மனுவில் தகவல்

வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது

ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவு

🟥🟦மக்களவையில் தமிழகம் மற்றும் புதுவை எம்.பிக்கள் 40 பேரும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

தங்கள் கைகளில் அரசியலமைப்பு புத்தகத்தை ஏந்தியபடி, எம்.பிக்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

🟥🟦நாங்கள் அறையிறுதியில் விளையாட உள்ளது கனவு போல் உள்ளது

ஆப்கன் அணி

🟥🟦இன்று முதல் செவ்வாய் கிழமை தவித்து மற்ற நாட்களில் மதுரையில் இருந்து திருச்சி வழியாக பெங்களூருவுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இன்று முதல் ஜூலை 29-ம் தேதி வரை மதுரை – பெங்களூரு சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.இன்று காலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பெங்களூருவுக்கு மதியம் 1 மணிக்கு சென்றடையும்.

🟥🟦சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,440க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.95,50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

🟥🟦நான் நலமாக இருக்கிறேன்

இலங்கை வானொலி பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீது உடல் நலக்குறைவால்

இறந்துவிட்டதாக சில ஊடகங்களில் வதந்தி வந்த நிலையில் வீடியோ வெளியிட்டார்.

🟥🟦அவை மாண்பை குறைக்க வேண்டும் என்ற ரீதியில் அதிமுக செயல்படுகிறது 

சபாநாயகர் அப்பாவு

🟥🟦கள்ளச்சாராய பலிக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் உதவிகளை கொச்சைப்படுத்தக் கூடாது

முத்தரசன்

🟥🟦அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு

🟥🟦🟥🟦🟥🟦🟥🟦🟥🟦

🌹🌹தரிசன டிக்கெட்கள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் ரூ. 300 தரிசன டிக்கெட்களை அதிக எண்ணிக்கையில் வாங்கித் தருகிறோம் என்று சில இடைத்தரகர்கள் தங்கள் செல்போன் நம்பர்களுடன் சமூக வலைதளங்களில்

தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

👉இந்நிலையில், இது பற்றி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ. 300 தரிசன டிக்கெட், லட்டு பிரசாதம் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் வெப்சைட் மூலமும், மாநில அரசுகளுக்கு சொந்தமான ஒரு சில சுற்றுலா வளர்ச்சி கழகங்கள் மூலமும் மட்டுமே பக்தர்கள் பெற முடியும். ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம். சமூக வலைதளங்களில் வெளியாகும் இது போன்ற போலியான தகவல்களை பக்தர்கள் நம்ப கூடாது .

No comments:

Post a Comment