Saturday, June 29, 2024

வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

 **

சிக்கன்  - 3/4 kg

தேங்காய் துருவல்  - கால் மூடி

முந்திரிபருப்பு  - 8

கசகசா  - 1  ஸ்பூன்

தாளிப்பதற்கு பட்டை,சோம்பு சிறிதளவு

பெரிய வெங்காயம் - 1 

தக்காளி - 2 

தேங்காய் எண்ணெய் - 5 

ஸ்பூன்

மிளகு தூள்  - ஒரு ஸ்பூன்

உப்பு  - தேவையான அளவு


வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்


பட்டை  - 2  துண்டு

ஏலக்காய்  - 3 

கிராம்பு -  3 

கல்பாசி  -  2

சோம்பு -  கால் ஸ்பூன்

சின்ன வெங்காயம்  - 15

பூண்டு  - 10  பல்

நறுக்கிய இஞ்சி துண்டு  - 5 

சீரகம்  - 1  ஸ்பூன்

மல்லித்தூள்  - 3  ஸ்பூன்

மிளகாய்த்தூள்  - ஒன்றரை ஸ்பூன்

மஞ்சள் தூள்  - கால் ஸ்பூன்

கருவேப்பிலை, மல்லித்தழை  - சிறிதளவு




சிக்கனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும்.


பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


கசகசாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.


தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.


தேங்காய், கசகசா,  முந்திரிப்பருப்பு  சிறிது  தண்ணீர் சேர்த்து நைஸ் பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.


கடாயை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கிராம்பு ஏலக்காய்,கல்பாசி போட்டு ஒரு நிமிடம் வறுத்து விட்டு சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு

சேர்த்து அதையும் நன்கு வதக்கி அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் ,மஞ்சள்தூள்  கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ளவும்.


மசாலா கருகி விடாமல் பார்த்துக் கொள்ளவும்.


வறுத்த மசாலா பொருட்களை ஆறவைத்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.


பின்பு கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து  அதோட நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கிஅதனுடன்  தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கி  சிக்கன்,  தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் .


சிக்கன் சிறிது வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மல்லித்தூள் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு கிளறிவிட்டு பின்பு அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு கடாயை மூடி அடுப்பை மிதமான தீயில் 15 நிமிடம் வைத்தால் சிக்கன் நன்கு வெந்து விடும் .


பின்பு தேங்காய் விழுது சேர்த்து  ஐந்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து பச்சை வாசனை போனவுடன் கடைசியாக மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால்மிகவும் சுவையான வறுத்தரைத்த சிக்கன் குழம்பு ரெடி

No comments:

Post a Comment