Sunday, June 23, 2024

செய்தித் துளிகள் 23.06.2024 (ஞாயிற்றுக்கிழமை)

🎁🎁தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை மற்றும் மாறுதல்

கலந்தாய்வு அட்டவணை வெளியீடு.

🎁🎁ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு திருத்தப்பட்ட கால அட்டவணை வெளியீடு                                  👉ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும். விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப் பட்டியல் ஜூலை 3ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 4, 5ம் தேதிகளில் முன்னுரிமை பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை

🎁🎁1563 மாணவர்களுக்கு இன்று நீட் மறுதேர்வு

கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட 1,563 மாணவர்களுக்கு இன்று நீட் மறுதேர்வு நடைபெறுகிறது; 

ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றது சர்ச்சையானது.

🎁🎁ரூ.1000 கோடியில் பள்ளி மேம்பாட்டு பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்

🎁🎁ஒன்றிய அரசு நடத்தும் தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் சிறை ரூ.1 கோடி அபராதம்: கடுமையான புதிய சட்டம் அமலுக்கு வந்தது; நீட், நெட் வினாத்தாள் கசிவுக்கு மத்தியில் திடீர் அறிவிப்பு.

🎁🎁தேசிய தேர்வு முகமை தேர்வுகளை வெளிப்படையாகவும், நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்வது தொடர்பாக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான உயர்மட்ட நிபுணர் குழுவை அமைத்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு;

தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த பரிந்துரைகளை அறிக்கையாக 2 மாதங்களில் இந்த நிபுணர் குழு மத்திய அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கும் என அறிவிப்பு

🎁🎁தேசிய தேர்வு  முகமையின் இயக்குனராக பிரதீப் சிங் கரோலா ஐஏஎஸ் நியமனம் தற்போதைய NTA இயக்குனர் சுபோத் குமார் சிங் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவு NEET,NET தேர்வு குளறுபடிகள் காரணமாக நடவடிக்கை.

🎁🎁இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு 

-மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு

🎁🎁மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

🎁🎁அரசுப் பள்ளிகளில் 1997 வரை நடைமுறையில் இருந்த 1:20 ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

🎁🎁இல்லம் தேடி கல்வி'  ITK திட்டம்  மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁சிறந்த மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு ஹெலன் கெல்லர் விருது உள்ளிட்ட 58 வகையான அறிவிப்புகள் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டன.

🎁🎁எழுதும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் அடிப்படை கணிதத் திறன் குறைவான மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

🎁🎁ஜூலை 15ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுதல் சார்ந்து பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் வெளியீடு.

🎁🎁அரசு உதவிபெறும் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்: தயார்நிலை குறித்து ஆய்வு செய்ய குழு

🎁🎁அரசுப் பணிகளில் நியமனம் செய்ய ஓராண்டு முதுகலை பட்டப்படிப்பானது செல்லும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🎁🎁மெட்ராஸ் உயர்நீதிமன்ற வேலை வாய்ப்பு-2024 விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 26-06-2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

🎁🎁தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 8 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ. படிப்புகளுக்கு வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎁🎁ADW - பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற தலைமையாசிரியர் / ஆசிரியர்களுக்கு மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்த ADW இயக்குநர் உத்தரவு

🎁🎁அரசு பள்ளிகளில், 'எமிஸ்' தளத்தில், மாணவர், ஆசிரியர் விபரம் பதிவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை, தனியார் நிறுவன ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.

🎁🎁HSS HM Promotion News:

09.07.2024 அன்று உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதால் அதன் பிறகே மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்.

🎁🎁"விஷ சாராய சம்பவத்தின் எதிரொலி - தேடுதல் வேட்டைகளை தீவிர படுத்துக"

ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் உத்தரவு

🎁🎁பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மானிய கோரிக்கை மீதான பதிலுரை:

பால்வளத் துறையில் அனைத்து ஒன்றியங்களும் லாபகரமாக இயங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகப்படியான போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

42 சதவீதம் அகவிலைப்படி அனைவருக்கும் ஏற்கனவே உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அகவிலைப்படியை 46%ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஊழியர்களுக்கும் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடித்தம் தவிர்த்து வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும்.

ஆவின் செலவினங்கள் 15 சதவீதம் வரை குறைந்துள்ளது.

🎁🎁4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

🎁🎁 "சென்னை மாநகராட்சியில் உள்ள வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்"

"சென்னை மாநகரில் மொத்த மக்கள்தொகை 89 லட்சம். வார்டுகளின் எண்ணிக்கை 200"

"ஒரு வார்டுக்கு சராசரியாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக வசிக்கின்றனர்"

சென்னையில் வார்டுகளை அதிகப்படுத்தி, மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன 

அமைச்சர் கே.என்.நேரு

🎁🎁"பணக்காரர்கள் நாய் வளர்க்கிறார்கள் - வெளியில் அழைத்து வரும் போது அசம்பாவிதம் நடக்கிறது"

நாய்களுக்கு கருத்தடை செய்து பெருகாமல் பார்த்துக் கொள்ளும் பணி நடந்து வருகிறது

"வீதிகளில் மாடுகள் முதல் முறை பிடிபட்டால் ரூ.5,000 அபராதம் - 2வது முறை ரூ.10,000 அபராதம்

"3வது முறை மீண்டும் பிடிபட்டால் மாடுகளை ஏலம் விட நடவடிக்கை"

"நாய்களை பூங்காவிற்கு அழைத்து வரும் போது சில தவறுகள் நடந்து வருகின்றன"

நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு

🎁🎁“தமிழ்நாடு அரசுக்கு ₹3000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”

-தங்கம் தென்னரசு கோரிக்கை

 பேரிடர் நிவாரண நிதியாக ₹37,906 கோடியை மாநில அரசு கோரி இருந்த நிலையில், மத்திய அரசு மிகக் குறைவாக ₹276 கோடி மட்டுமே விடுவித்துள்ளது.

இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதி. தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான சீரழிவு பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழ்நாடு அரசுக்கு ₹3000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்”

மத்திய நிதியமைச்சரிடம் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை

🎁🎁சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,695க்கும், சவரன் ரூ.53,560க்கும் விற்பனை

🎁🎁முதுகுத்தண்டு வலி!                                       1. முதுகுத்தண்டு வலி  தொப்பை விழுவதனால் ஏற்படும்.                            2. முதுகுத்தண்டு வலி ஒல்லியாக இருந்தும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும். 

உடல் பயிற்சி மூலம் தொப்பை பகுதியை இறுக்கமாக வைத்துக் கொண்டாலே முதுகு வலி ஏற்படாது.

🎁🎁சர்க்கரை நோயாளிகளே உங்களுக்கு இயற்கையாக இன்சுலின் சுரக்க இதை ட்ரை பண்ணி பாருங்க...                          - பாகற்காய்,பட்டை, கடுகுரோகிணி,வெந்தயம்

இந்த நான்கையும் கொதிக்க வைத்து ஆற வைத்து தினமும் காலையில் குடித்து வாருங்கள். 

ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

No comments:

Post a Comment