Sunday, June 30, 2024

செய்தித்துளிகள்- 30.06.2024(ஞாயிற்றுக்கிழமை)

தமிழ்நாட்டின் புதிய பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக பொறுப்பேற்க உள்ள செயல் சிங்கம் மதிப்புமிகு திரு கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பின் சார்பில் இனிய நல்வாழ்த்துக்கள் ..

🟥🟦தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனராக திரு கண்ணப்பன் அவர்களும்,

👉தொடக்கக் கல்வி இயக்குனராக திரு சேதுராம வர்மா அவர்களும்,

👉தேர்வுத்துறை இயக்குனராக திருமதி லதா அவ

ர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🟥🟦தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை

மாணவர்கள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு வேண்டுகோள்.

🟥🟦பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஊடகங்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது, செஸ், கிரிக்கெட் போன்ற போட்டிகளில் சாதிப்பது போல இந்த துறையிலும் சாதிப்பார்கள்

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

🟥🟦முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக வேளாண்மை அலுவலர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 133 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

🟥🟦கல்வியில் புரட்சி செய்வதில் இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்க வேண்டும்: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு

🟥🟦தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய தரமற்ற இலவச சைக்கிள் நடவடிக்கை எடுக்க ப.சிதம்பரம் கோரிக்கை.

🟥🟦உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணி குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு.

🟥🟦SMC - மறுகட்டமைப்பு நடைமுறைகளை மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அனுமதி அளித்தல் ஆணை வெளியீடு.


🟥🟦ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு.

🟥🟦தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

🟥🟦தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

🟥🟦1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவிகளுக்கு வழங்கும் இலவசபேருந்து பயண அட்டை பெற EMIS தளத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

🟥🟦யுஜிசி நெட் தேர்வு - கணினிவழியில் நடத்த முடிவு.

ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு தேதி அறிவிப்பு; ஆக.21ஆம் தேதி முதல் செப்.4 ஆம் தேதி வரை நடைபெறும்.

ஏற்கெனவே நடைபெற்ற எழுத்துத் தேர்வு இம்முறை, கணினி வழியில் நடைபெறும்.

👉சிஐஎஸ்ஆர்-யுஜிசி நெட் தேர்வும் ஜூலை 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.

👉என்சிஈடி தேர்வு, ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் - தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு.

🟥🟦ஆய்வக உதவியாளர்களுக்கு, ஆய்வக உதவியாளர் பணியை செய்யவில்லை என்பதால் MEMO வழங்குதல் தொடங்கிவிட்டது.

🟥🟦அரசு பாலிடெக்னிக் கல்லூரி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

🟥🟦அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணி - தொகுப்பூதிய முறையில் நிபந்தனையின் அடிப்படையில் நிரப்ப உத்தரவு

🟥🟦2023-24 CPS A/C slip வெளியிடப்பட்டுள்ளது.

🟥🟦ஆசிரியர்களை தரக்குறைவாக பேசிய காஞ்சி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன  விரிவுரையாளர் கந்தவேல் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை.

🟥🟦அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை மாவட்டத்திற்கு வெளியேயும் பணி மாறுதல் செய்ய தமிழக அரசு உத்தரவு.

🟥🟦எண்ணும் எழுத்தும் பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு

🟥🟦NHIS திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரை பயனாளிகளாக சேர்க்க உரிய முறையில் ஆய்வு செய்யப்படும் - NHIS திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி  நெறிமுறைகள் வழங்க முதலமைச்சர் உத்தரவு.

🟥🟦காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் மற்றும் சிறப்பு இலக்கு படை ஆளிநர்கள் பணிபுரியும் பொழுது உயிரிழப்பு / உடல் ஊனம் / காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத்தொகை உயர்வு - முதலமைச்சர் அறிவிப்பு.

🟥🟦இன்று 30-06-2024 அன்றுடன் பணி நிறைவு பெறும் நமது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற உறுப்பினர் இராசன்கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருமதி ப.கலைவாணி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....


🟥🟦தேர்வு முடிவுகள் வெளியானதுமே தேர்வர்களின் விடைத்தாள்களை TNPSC வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

🟥🟦PTA இணைப்புக் கட்டணத் தொகை மறுநிர்ணயம் - DEE செயல்முறைகள் வெளியீடு.

🟥🟦 கையடக்க கணினி (Tablet) வழங்கப்படும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் - பள்ளி வாரியான பட்டியல் வெளியீடு.( All Districts)

🟥🟦உலக அரங்கில் இந்திய பல்கலைக்கழகங்கள் முன்னேற்றம் - பிரதமர் மோடி பாராட்டு 

🟥🟦நீட் விவகாரம் - தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்.

🟥🟦நீட் விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

🟥🟦மாநில கல்வி கொள்கை குழு 

வரும் ஜூலை 1ம் தேதி இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பிக்கின்றனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்பிக்க உள்ளனர்.

🟥🟦விரைவில் மருத்துவத்துறை காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

🟥🟦நீட் தேர்வை கண்டித்து ஜூலை 3 ஆம் தேதி திமுக மாணவரணி போராட்டம் அறிவிப்பு

🟥🟦நீட் தேர்வு ஒழியும் வரை அதிமுக குரல் ஒலிக்கும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதி

🟥🟦மாணவ, மாணவியர்களை கௌரவித்த விஜய் - அன்பு தம்பிக்கு வாழ்த்துகள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு

🟥🟦நீட் தேர்வு முறைகேடு - முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.

🟥🟦வன்னியர் இட ஒதுக்கீடு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

🟥🟦ஒசூரில் 2000 ஏக்கரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் -சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு 

🟥🟦சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும்போது உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்தால் வழக்குப்பதிவு - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

🟥🟦உசேன் போல்ட், எம்.எஸ்.தோனி போல முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடு - உதயநிதி ஸ்டாலின் புகழாரம் 

🟥🟦தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க விரைவில் அமெரிக்கா பயணம் 

🟥🟦தமிழ்நாட்டிற்கு நல்ல அரசியல் தலைவர்கள் தேவை - படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என த.வெ.க.தலைவர் விஜய் அழைப்பு

🟥🟦விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரம் - அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு 

🟥🟦ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் இலவசம், குடும்ப பெண்களுக்கு ரூ.1500 மாதம் வழங்கப்படும் - மகாராஷ்ட்ரா அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு

🟥🟦நீட் முறைகேடு குறித்து விசாரிக்ககோரி எதிர்க்கட்சியினர் அமளி - மக்களவை ஜூலை 1 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

🟥🟦ஜியோ, ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து சேவை கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் நிறுவனம் - வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு

🟥🟦கடும் வெயிலால் உயிரிழக்கும் பாகிஸ்தான் மக்கள் - பலி எண்ணிக்கை 550 ஐ தாண்டியது

🟥🟦ஈரானின் அடுத்த அதிபரை தேர்வு செய்யும் பொருட்டு நடந்த தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு

🟥🟦இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு:

நீலகிரி கொடைக்கானலுக்கு காரில் செல்லும் சுற்றுலா பயன்களுக்கான இ-பாஸ் நடைமுறை நீட்டிப்பு.

அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🟥🟦டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - இந்திய அணி த்ரில் வெற்றி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் 

இந்திய அணி த்ரில் வெற்றி.

17 ஆண்டுகளுக்கு பிறகு 2 வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது இந்திய அணி.

🟥🟦கோவை மாநாகராட்சியுடன் இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் வெளியீடு.

🟥🟦தமிழகத்தில் புதிதாக திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சிகள் உதயமாகின்றன

👉வருவாய், மக்கள் தொகை வரம்புகள் திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்

👉மாநகராட்சியாக தரம் உயர்த்த தடையாக இருந்த மக்கள் தொகை, ஆண்டு வருமானத்தை தளர்த்தி திருத்தப்பட்ட மசோதா நிறைவேற்றம்  

👉நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சத்தில் இருந்து 2 லட்சமாகவும், ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைப்பு

👉புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி உதயம்

👉திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகளை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி உதயம்

🟥🟦அரசு பேருந்துகள் செல்ல முடியாத கிராமப் பகுதிகளில் அதிகம் மினி பேருந்து வழித்தடங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது!

கடந்த அதிமுக ஆட்சியில் மினி பேருந்து புறக்கணிக்கப்பட்டது.

தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தற்போது மினி பேருந்துகள் கிராமப் பகுதிகள் வரை சென்று வருகிறது!

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

🟥🟦இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ₹13 கோடி மதிப்பில் அதினவீன மூளை இரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும்- சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

🟥🟦இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்”

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்

 “இனிமேல் எங்காவது கள்ளச்சாராய உயிர் பலி நடக்குமானால், அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரியும், எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டும்!

 கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு பிறகு ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடர்பாக கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளேன்"

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

🟥🟦சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,685க்கும், சவரன் ரூ.53,480க்கும் விற்பனை

🟥🟦நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஜோ பைடன் தடுமாற்றம்

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான விவாதத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தடுமாறியுள்ளார்.

குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப் உடனான விவாதத்தில், பதில் சொல்ல முடியாமல் பைடன் பல இடங்களில் திணறியுள்ளார்.

No comments:

Post a Comment