Thursday, June 27, 2024

செய்திகள் 27.06.2024 வியாழக்கிழமை

⛑️⛑️பழைய ஓய்வூதியத் திட்டதத்தை அமல்படுத்துவதற்கான அரசின் கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தெரிவித்தார்.

⛑️⛑️Plastic Tiffen Box, Plastic Water Bottle போன்றவற்றை பயன்படுத்தினால் Cancer வரும் என்பதால் இது குறித்த விழிப்புணர்வை சுற்றுச்சூழல் மன்றம் வாயிலாக மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு                                                      ⛑️⛑️9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய'அகல்

விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.

⛑️⛑️நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு  அமல்படுத்தியது.

⛑️⛑️அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

⛑️⛑️அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், பதவி உயர்வு இடமாறுதல் வழங்கப்படாததால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

⛑️⛑️மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணியினை வரன்முறை செய்து அரசாணை வெளியீடு

⛑️⛑️நடைபெற்று முடிந்த ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் [NOTIFICATION  பகுதியில்] 27.06.2024 [வியாழக்கிழமை] அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம்.

⛑️⛑️அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை,பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்ப பழங்குடியினர் நலத்துறை உத்தரவு.

⛑️⛑️முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு

தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில் வெற்றி பெறும் 500 மாணவர்கள், 500 மாணவிகளுக்கு, இளநிலை பட்டப்படிப்பு முடியும் வரை மாதம் ₹1000 என ஆண்டுக்கு ₹10000 (ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள்) வழங்கப்படும். 

அறிவாற்றல், கல்வியில் திறமையுள்ள மாணவர்களை அடையாளம் காண, ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது

⛑️⛑️‘நான் முதல்வன்’ உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தக் கூடுதலாக 2 இணை இயக்குநர் பணியிடங்களுக்கு அனுமதியளித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அரசாணை வெளியீடு.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மாணவர் நலத்திட்டங்களைச் செயல்படுத்த இந்த நடவடிக்கை

⛑️⛑️மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

⛑️⛑️மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்துள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

⛑️⛑️இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான மாநில முன்னுரிமை பட்டியல் வெளியீடு.

⛑️⛑️ஆய்வக உதவியாளர் பணியிடங்களை பணிநிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு.

⛑️⛑️இல்லம் தேடி கல்வி திட்டத்தில் வட்டார அளவில் பணியாற்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மீண்டும் பள்ளி பணிக்கு திரும்ப உத்தரவு: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை.

⛑️⛑️முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு.

⛑️⛑️குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

⛑️⛑️மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தி தேர்வு - அரசியல் தலைவர்கள் வாழ்த்து

⛑️⛑️உக்ரைன் போருக்கு பின்னால் முதல்முறையாக பிரதமர் மோடி ரஷ்யா பயணம் 

⛑️⛑️டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்

⛑️⛑️சென்னையில் நடைபெறும் இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் போட்டியை இலவசமாக காணலாம் என அறிவிப்பு

⛑️⛑️சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் ஓய்வு அறிவிப்பு 

⛑️⛑️மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியும் என முதலமைச்சர் கூறுவது சரி அல்ல  - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️இருசக்கர வாகன திருட்டை தடுக்கும் வகையில் சென்னை போலீஸார் நடமாடும் நவீன கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இரவு சோதனையின் போது சாலை சந்திப்புகளில் இந்த கேமராக்களை காவலர்கள் வைப்பதால், அதில் வாகன எண் பதிவாகிறது. இது வாகனத்தை மீட்க உதவுவதாக தகவல்.

⛑️⛑️சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக ஆட்சியில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில்,தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளார். 

👉இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்.

⛑️⛑️புதிய பத்திரப் பதிவு சட்டத்தின் கீழ் 1,440 போலி பத்திரப் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

போலி பத்திரப் பதிவு தடுப்பு நடவடிக்கை தொடர்பான கோரிக்கைக்கு அமைச்சர் மூர்த்தி பதிலளித்துள்ளார்.

⛑️⛑️ரூ.15.60 கோடி செலவில் 23 திருக்கோயில்களுக்கு புதிய திருத்தேர்கள் செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் 108 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு பேரவையில் வெளியிட்டார்

⛑️⛑️இந்தியாவுடன் நெருங்கிய உறவு வைத்து கொள்ள விருப்புகிறோம்

பாக்., துணை பிரதமர் இஷாக் விருப்பம்

⛑️⛑️எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி

👉தெற்கில் இருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதை உறுதி செய்வோம்.  அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவோம்” என ராகுல் காந்தி பதிவு

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாமகவுக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்படுகிறது

தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் அறிவிப்பு

⛑️⛑️சென்னை சேப்பாக்கம் மைதானம் போன்று கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைகிறது.

⛑️⛑️தமிழ்நாடு அரசு பெண்களுக்கு கொடுத்த இடஒதுக்கீடு மூலமாக காவல்துறையில் துணைக் கண்காப்பாளர் பணி நியமன ஆணை பெற்றுள்ளேன்

காயத்ரி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்.

⛑️⛑️விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 29 வேட்பாளர்கள் போட்டி

⛑️⛑️“தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய திட்டங்கள் எல்லாம் உத்திர பிரதேசத்திற்குச் செல்வது யாரால்? என அனைவருக்கும் தெரியும்.

மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்  போது மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளின் அடிப்படையில் நிதியை ஒதுக்க வேண்டும்

-சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

⛑️⛑️பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர்களுக்கு காவல்துறை மூலம் முகவரி, நடத்தை சரிபார்ப்பு செய்யும் கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை

வெளியுறவு அமைச்சர் ஜெய் ஷங்கர் தகவல்

⛑️⛑️பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய,அரசு போக்குவரத்துக் கழகங்களின் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவு பொருத்துவது அவசியமாகிறது. 

3886 பேருந்துகளுக்கு ₹15.54 கோடி செலவில் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும்!

போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவிப்பு

⛑️⛑️சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 குறைந்து ₹53,280க்கு விற்பனையாகிறது.

⛑️⛑️கேசினோவில் ₹33 கோடி வென்ற நபர் மாரடைப்பால் உயிரிழப்பு!- அதிர்ஷ்டம் அடித்தும் அனுபவிக்க முடியாத சோகம்

சிங்கப்பூரில் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடி சுமார் ₹33 கோடி வென்ற நபர், இன்ப அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த பரிதாபம்!

திடீரென மயங்கி விழுந்தவரை அங்குள்ளவர்கள் முதலுதவி அளித்து காப்பாற்ற முயன்றும், பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அதீத அதிர்ச்சி காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தகவல்

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹உடல் எடையை குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்:-

👉உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாவுச்சத்து, சர்க்கரை சத்து அதிமாக உள்ள உணவுப்பொருட்கள், அசைவ உணவுகள் குறிப்பாக இறைச்சியை தவிர்க்க வேண்டும். மதுப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தேவையான அளவு ஓய்வு எடுக்க வேண்டும். வாழ்வியல் முறையை மாற்ற வேண்டும். உடம்பில் எங்காவது புற்றுநோய் இருந்தாலும், சிறுநீரகப் பிரச்சனை இருந்தாலும், தொடர்ந்து நீண்ட நேரம் விரதம் இருந்தாலும், இனிப்பு பண்டங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் யூரிக் அமிலம் அதிகமாகலாம். தினமும் போதுமான அளவு உடற்பயிற்சி செய்தல், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.பாகற்காய், பீர்க்கங்காய், மஞ்சள் பூசணிக்காய், புடலங்காய், கேரட், புரோக்கோலி, வாழைப்பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, ஆரஞ்சுப் பழம், அன்னாசி, சாத்துக்குடி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment