Wednesday, June 26, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்

(26-ஜூன்)

*ம.பொ.சிவஞானம்.*

✍ விடுதலைப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம் 1906ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் பிறந்தார்.

✍ வள்ளலாரும் பாரதியும், எங்கள் கவி பாரதி, சிலப்பதிகாரமும் தமிழரும், கண்ணகி வழிபாடு உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு சிலம்புச் செல்வர் என்ற பட்டத்தை சூட்டினார்.

✍ இவர் செங்கோல் என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். இவர் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றியதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மேலும், இவர் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.

✍ உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய ம.பொ.சி., 1995ஆம் ஆண்டு மறைந்தார்.

 

*பெர்ல் பக்*

✍ 801892ஆம் ஆண்டு 5ஜூன் 26ஆம் தேதி புகழ்பெற்ற அமெரிக்க புதின எழுத்தாளர் பெர்ல் பக் அமெரிக்காவில் உள்ள ஹில்ஸ்பரோ என்னும் ஊரில் பிறந்தார்.

 பெர்ல் பக் அவர்களின் எழுத்துப் பணி 1930ஆம் ஆண்டு தொடங்கியது.

✍ இவர் 1932 ஆம் ஆண்டில் புலிட்சர் பரிசும், 1938 ஆம் ஆண்டில் நோபல் பரிசும் பெற்றவர்.

✍ The Good Earth என்ற சிறந்த நூலை எழுதிய இவர் 1973ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment