Friday, June 28, 2024

கீரை கூட்டு செய்யவது எப்படி...

தேவையான பொருட்கள்:


குக்கரில் வேக வைக்க 


ஒரு கப் துவரம் பருப்பு 


கூட்டு செய்ய


எண்ணெய் 

அரை டீஸ்பூன் சீரகம்

மூன்று பல்

பூண்டு 

மூன்று பச்சை மிளகாய் 

பத்து சின்ன வெங்காயம்

ஒரு தக்காளி 

கீரை 

மஞ்சள் தூள் 

வேக வைத்த பருப்பு 

உப்பு 


தாளிக்க


எண்ணெய் 

கடுகு 

உளுத்தம் பருப்பு 

கால் டீஸ்பூன் சீரகம்

கருவேப்பிலை

பெருங்காயத்தூள் 

இரண்டு வரமிளகாய்


கீரை கூட்டு செய்முறை: 


                      * முதலில் கீரையை எடுத்து கழுவி சுத்தம் செய்து கட் பண்ணிக் கொள்ளவும். பிறகு குக்கரில் துவரம் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விடவும்.


                     * அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் சீரகம், பூண்டு,பச்சை மிளகாய், நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும்.


                     * பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு கீரையை சேர்த்து கிளறி விடவும்.(அரைக்கீரை அல்லது பசலைக்கீரை நன்றாக இருக்கும் கீரை கூட்டுக்கு). பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட்டு ஏற்கனவே வேக வைத்த பருப்பை போட்டு தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். 


                    * பிறகு தாளிக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு,சீரகம்,கருவேப்பிலை,

வரமிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பருப்பில் ஊற்றி கிளறிவிட்டு இறக்கவும்.சுட சுட பரிமாறவும்.நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

No comments:

Post a Comment