Friday, June 14, 2024

பாசிப்பருப்பு பாயாசம் 😍

குழைந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய சத்தான உணவுகளில் பாசிப்பருப்பு தனி இடம் உண்டு , தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு என்று ஸ்பெஷலாக தயார் செய்யப்படும் சிறுதானிய சத்துமாவில் இந்த பச்சைப்பயறு (பாசிப்பயறு)  முளைகட்டி காயவைத்து சேர்க்கப்படுகிறது ,  நெல் சாகுபடியின் போது வரப்பு ஓரங்களில் உளுந்து, பாசிப்பயறு பயிரிடுவதை வழக்க

மாக கொண்டுள்ளனர் விவசாயிகள் .. 


பாசிப்பயறு பாயாசம் 😍


காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில் பாசிப்பருப்பு பாயாசம் மிக பிரபலம், நெல் நடவு  சமயங்களில் வேலை ஆட்களுக்காக இந்த பாயாசம் தயார் செய்வார்கள் , சுக துக்க   நிகழ்வுகளிலும் இந்த பாயாசம் இடம்பெறுகிறது .


செய்முறை எளிதுதான் ..


பாசிப்பருப்பு - 250 கிராம் 

வெல்லம் - 200 கிராம் 

ஏலக்காய் - 5 

பச்சை கற்பூரம் - ஒரு விரல் நுனி அளவு 

உப்பு - 1/4 ஸ்பூன் 

தேங்காய் பூ - 1 மூடி 

முந்திரி - தேவைக்கேற்ப 

நெய் - தேவைக்கேற்ப 


பாசிபருப்பு  மூழ்கும் அளவுக்கு குக்கரில் தண்ணீர் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும் ..


பாத்திரத்தில் வெல்லம் கரையும் அளவுக்கு தண்ணீர் வைத்து அதில் வேகவைத்த பாசிப்பருப்பை  சேர்த்து அத்துடன் உப்பு, ஏலக்காய் பொடி ( ஏலக்காயை சர்கரையோடு சேர்த்து அரைத்து போட்டால் நன்றாக மணக்கும்) , தேங்காய் பூ சேர்த்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து கிளறி விட்டு முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்தால் பாசிப்பருப்பு பாயாசம் தயார் ...

No comments:

Post a Comment