Tuesday, June 11, 2024

தனித்து நிற்கத் தயங்காதே

 *"!*

“கூடிவாழ்ந்தால் கோடி நன்மை” என்பது பழமொழி.


ஆதியில் மனிதன் கூட்டம் கூட்டமாய்த் தான் வாழ்ந்தான். அதன் பின் இடம் பெயர்ந்தான். வேட்டையாடினான். வீடு கட்டினான். எதிரிகளையும், காட்டு மிருகங்களையும் கூட்டத்தோடு தான் எதிர் கொண்டான். 


இன்றைக்கு அதே கூட்டம் உற

வினர்கள் என்ற பெயரில் உடன் வாழ்ந்தாலும், அவர்கள் ஒரு நாளும் உதவிக்கு வருவதில்லை.


நாம் உயர்வதைக் கண்டு மகிழ்வதில்லை மாறாக நம்மைப் பற்றி அவதூறு பரப்புவதிலும்,

நம்மை ஒதுக்குவதிலும் தான் முன் நிற்கிறார்கள். 


ஒரு ஏழையின் மகன் உயர் கல்வி கற்க விரும்பினால் அவனுக்கு அது சாத்தியப்படுமா? என்றால் சந்தேகம் தான்.


காரணம் அவனுடைய தந்தைக்கு அடுத்த வேளை உணவை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்கு  வேலைக்குப்

போய் உழைத்தால் மட்டுமே அவனால் முடியும். 


அந்த நேரத்தில் உறவினர்களால் அவன் தனித்து விடப் படுவான். அப்படி நாம் தனித்து விடப்படும் போது தான் நமது உடலும் மனதும், சுயக் கட்டுப்பாடும் வாழ்க்கைக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்கின்ற உண்மை தெளிவாக விளங்கும். 


எனவே நமது வாழ்க்கை என்பது நம் கையில் மட்டுமே இருக்கிறது!

எந்த நேரத்திலும், எப்படிப் பட்ட சூழ்நிலையிலும் மன ஆறுதலுக்காகக் கூட மற்றவர்களிடம் நிற்காதீர்கள்! 


எதிர் நீச்சல் போடுவதற்கு நீங்கள் தயாராக இருந்தால் மட்டுமே தன்மானத்தோடு உங்களால் வாழ முடியும்! 


உங்களுக்கு முன்னால் செல்பவனைப் பற்றி கவலைப் படாதீர்கள். 


உங்களுக்குப் பின்னால் நிற்பவன்,

உங்களைப் பற்றி தரக் குறைவாக மதிப்பீடு செய்பவனிடம் எந்நேரமும் கவனமாக இருங்கள்! 


உங்களை முந்தி அவனால் பயணிக்க முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment