Friday, June 14, 2024

உருளைக் கிழங்கு பிடிக்காத ஆள் இருக்கமுடியுமா

குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக் கிழங்கும் ஒன்று - அந்த French fries ல அப்படி என்ன இருக்குன்னு தெரியல சவுக்கு சவுக்குன்னு - அது எதோ பெரி பெரி பௌடராம் 


தயிர் சாதம், புளிசாதம் ,தேங்காய் சாதம், சாம்பார் சாதம், புதினா மல்லி சாதம், வெஜ் பிரியாணி, தேங்காய் பால் நெய் சோறு, ரசம் சாதம் அப்படின்னு எந்த ஒரு உணவுக்கும் சரியான சைடிஸ்னா அது உருளைக்

கிழங்கு வறுவல் தான் ...


அந்த உருளைக் கிழங்கு வறுவலே பல மாதிரி செய்றாங்க நாம ஒரு மாதிரி பாப்போம் 😅


உருளைக் கிழங்கு - 1/4 கிலோ 

மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 

தக்காளி - 1

வெங்காயம் - 1

பூண்டு - 5 பல் 

சோம்பு - 1ஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 

தேங்காய் எண்ணெய் - 100 மில்லி 

உப்பு தேவையான அளவு 

கறிவேப்பிலை தேவையான அளவு ..


முதல்ல உருளைக் கிழங்க இரண்டா வெட்டி உப்பு போட்டு  வேக விடுங்க ..


100 மில்லி தேங்காய் எண்ணெயில் சோம்பு, வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு, கறிவேப்பிலை , உப்பு சேர்த்து நல்லா வதக்குங்க ..


வேக வைத்த உருளைக் கிழங்க வதக்கிய தக்காளி வெங்காயத்தோட கலந்து நல்லா ரோஸ்ட் ஆகுற வரைக்கும்  வறுத்தா - உருளைக் கிழங்கு வறுவல் தயார் ....


செஞ்சி பாத்துட்டு எப்படின்னு சொல்லுங்க உப்பு பாத்து போட்டுக்கோங்க, தேங்காய் எண்ணெய் பிடிக்காதவங்க நல்லெண்ணெயில் கூட செஞ்சி பாருங்க சூப்பரா இருக்கும் ....

No comments:

Post a Comment