Friday, June 28, 2024

உளுத்தம்பருப்பு - கீரை வடை

தேவை:     உளுத்தம்பருப்பு – 100 கிராம்  நறுக்கிய கீரை - 2 கைப்பிடியளவு  சோம்பு - சிறிதளவு  பச்சை மிளகாய் – 3 (நசுக்கவும்)  வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)  தோல் சீவி நறுக்கிய இஞ்சி – சிறிதளவு  எண்ணெய், உப்பு - தேவையான

அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை 15 நிமிடங்கள் ஊறவிடவும். இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றி, ஊறிய உளுத்தம்பருப்பைக் களைந்து சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். அதனுடன் உப்பு, சோம்பு சேர்க்கவும். பிறகு வெங்காயம், கீரை சேர்த்துக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். மாவை வடைகளாகத் தட்டி நடுவே துளையிட்டு சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். இரும்புச் சத்து அதிகமுள்ள இந்த கீரை வடை, அனைவரும் விரும்பி உண்ணும் வடையாகவும் அமையும்.

No comments:

Post a Comment