Wednesday, June 26, 2024

மயிலிகாதி பஸ்பம்

 *:*செய்முறை:

ஒர் மண் சட்டியில் 150 கிராம் முசுமுசுக்கை இலை போட்டு அதில்  திப்பிலி ருத்ராட்சம் மயிலிறகு வகைக்கு 100 கிராம் போட்டு அதன் மேல் மீண்டும் 150 கிராம்  முசுமுசுக்கை இலையை போட்டு பானைக்கு பொருத்தமான அகல் மூடி சீலை மண் செய்து  100 எருவில் புடமிட   கரி போல் கருமை நிறத்தில்  இருக்கும்.  இதனை மீண்டும் கல்வத்தில் இட்டு முசுமுசுக்கை சாறு விட்டு 3 மணி நேரம் அரைத்து வில்லை தட்டி காயவைத்து  மண் அகல்மூடி சீலைமண் செய்து இலகு புடமிட மயிலிறகு கருமையான பற்பமாகும். 

மேற்கண்ட பற்பத்தை ஓரிரு அரிசி எடை வீதம் தேன் வெண்ணெய் என அனுபானத்தில் சாப்பிட

வேண்டும்.

*தீரும்நோய்கள்*

தீராத  இருமல்

 இரைப்பு

 கோழைகட்டு 

 விக்கல் 

வாந்தி

  மேலும் கபசுரம் சன்னி தீரும் . 

மேற்கண்ட நோய்களுக்கு ஏற்ப தாளிசபத்திரி சூரணம் அமுக்கிரா சூரணம் என மருந்துகளுடன் கலந்து கொடுக்க நல்ல பலன்களை தரும்.

தாளககருப்பு, தாமிரபற்பம், சிருங்கி பற்பத்திற்கு இணையானது இந்த மருந்து..மயிலிறகு தாமிரத்தின் சத்து.

No comments:

Post a Comment