Monday, June 24, 2024

நன்னாரி - தினம் ஒரு மூலிகை


*நன்னாரி*.  எதிரடிக்கில் அமைந்த குறுகி நீண்ட இலைகளை உடைய கம்பி போன்ற கொடியினும் இதன் மனம் உள்ள வேர்களே மருத்துவ பயன் உடையவை தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் தானே வளர்கிறது தாது வெப்பு அகற்றியாகவும் வியர்வை சிறுநீர் ஆகியவற்றை பெருக்கும் மருந்தாகவும் நோய அகற்றி உடல் தேற்றவும் உடலுறவும் ஊட்டவும் பயன்படும் பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மில்லி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு மேக அனல் மேகவட்டை நீர் கடுப்பு நீர் சுருக்கு வறட்டு இருமல் ஆகியவை தீரும் நீண்ட நாள் சாப்பிட நரை மாறும் பச்சை வேரை 20 கிராம் சிதைத்து 200 மில்லி நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மில்லி வீதம் காலை மாலை குடித்து வர பித்த நோய் சிறு நஞ்சு நீரழிவு வெட்டைச்சூடு கிராந்தி சொறி சிரங்கு தாகம் மிகுப்பசி மேகநோய் தீரும் இச்சா பத்தியம் அவசியம் வேறு 20 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக காய்ச்சி 100 மில்லி வீதம் காலை மாலை சாப்பிட்டு வர நாள் பட்ட வாதம் பாரிச வாதம் தோல் நோய்கள் தெரியாமை பித்தன்மம் தீரும் வேரை அரைத்து பற்று போட வீக்கம் மூட்டு வலி கட்டி புண் ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment