Monday, June 24, 2024

செய்தித்துளிகள் 24.06.2024(திங்கட்கிழமை)


🍒🍒நீட் இளங்கலை மறு தேர்வு - 48% பேர் ஆப்சென்ட்

👉1,563 மாணவர்களுக்காக நேற்று நடத்தப்பட்ட நீட் இளங்கலை மறு தேர்வில் 750 பேர் தேர்வு எழுத வரவில்லை

👉சண்டிகர், சத்தீஸ்கர், குஜராத், ஹரியானா மேகாலயாவில் தேர்வுகள் நடத்தப்பட்டது

👉நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

🍒🍒பள்ளிக்கல்வித்துறை அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன் முறை திருத்தம் ஆணை வெளியீடு.

🍒🍒மாணவர்கள் தங்கும் விடுதிக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் சலுகையை பெறும் மாண

வர்கள் குறைந்தது 90 நாட்களுக்கு விடுதியில் தங்கியிருக்க வேண்டும், மாத வாடகை 20 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்

🍒🍒மாணவர்களின் திறன்களை மேம்படுத்த உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை, 6 - 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுத்து, வாசிப்பு மற்றும் அடிப்படை கணிதத் திறனை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. 

அதன்படி, திறன் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் வகையில் செயல்திட்டம் உருவாக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பணிகளை தலைமை ஆசிரியர் மேற்கொண்டு, எமிஸ் தளத்தில் பதிவேற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

🍒🍒105 வயதில் முதுகலை பட்டம் பெற்ற மூதாட்டி

கல்வி கற்க வயது ஒரு தடையில்லை

பாதியில் விட்ட முதுகலை பட்டப்படிப்பை சுமார் 80 ஆண்டுகளுக்கு பின்பு படித்து பட்டம்பெற்றுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த 105 வயது மூதாட்டி ஜின்னி ஹிஸ்லோப்!

இவரது கணவர் இரண்டாம் உலக போரில் பங்கேற்பதற்காக சென்றதால் ஜின்னியால் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், தற்போது தனது விருப்பம் நிறைவேறியுள்ளதாக ஜின்னி நெகிழ்ச்சி

🍒🍒1995க்கு பிறகு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்:

-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒 உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 19.07.2024 அன்று விசாரணைக்கு வருகிறது.

🍒🍒திறன் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

🍒🍒நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு

🍒🍒குரூப்-2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது: ராமதாஸ்

🍒🍒முதல்வர் இல்லாமல் இயங்கும் 60-க்கும் மேற்பட்ட அரசு கலைக் கல்லூரிகள்

🍒🍒தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி

🍒🍒அரசு ஊராட்சி ஒன்றிய /நகராட்சி/ மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் - ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் பள்ளியில் பராமரிப்பு -சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் Smart Class & Hi-Tech Lab தொடங்குதல் சார்ந்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்  வழங்கி  அரசாணை - வெளியீடு 

🍒🍒இல்லம் தேடி கல்வி' ITK திட்டம் மறு சீரமைக்கப்பட்டு பின்தங்கிய பகுதிகளில் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இல்லை. அவர்கள் அவர்கள் பணிபுரிந்த பள்ளியில் ஜூலை 1ஆம் தேதி முதல் பணியேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

🍒🍒மாணவர் நலத்திட்ட விபரங்களை Update செய்வதில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நோட்டு புத்தகங்கள், பாட புத்தகங்கள் உள்ளிட்டவைகளுக்கு 

புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வகையில் உள்ளது. மதிய உணவுத் திட்டம் விபரத்தில் ஒப்புதல் படிவமும் (consent form) பதிவேற்றம் செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

🍒🍒அரசுப் பள்ளிகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வகங்களை ஆசிரியர்கள் தங்கள் சொந்தப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. அனைத்து செயல்பாடுகளும் மானிட்டரில் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

🍒🍒முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்: முதல்வர் ஸ்டாலின்

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

"நெட் தேர்வை தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிப்பு"

"முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்"

மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் நேர்மையான தேர்வு முறையை கொண்டுவர நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் 

மாணவர்கள், அவர்களின் குடும்பங்களின் மனதில் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் -

"தொழில்முறை படிப்புகளுக்கான தேர்வு செயல்முறையை தீர்மானிக்க மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும்"

🍒🍒நெல்லையில் சனிக்கிழமை  சாலையில் திரிந்த மாடு முட்டியதில் பைக்கில் சென்ற  நீதிமன்ற ஊழியர் பேருந்து மீது விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து, மாநகராட்சி அதிரடி நடவடிக்கையாக ஒரே நாளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 47 மாடுகளை

பறிமுதல் செய்து 13,000 பணமும் அபராதம் விதித்துள்ளனர்.

🍒🍒டி20 உலக கோப்பை தொடருக்கான அரையிறுதி சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்த இந்திய அணி 

இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று குரூப் 1 பிரிவில் இந்திய அணி முதலிடம்

🍒🍒ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக்கோப்பை சூப்பர் 8 சுற்று கிரிக்கெட் போட்டியில் ஆப்கான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி.                                                              🍒🍒தமிழ்நாட்டில் வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டுவதற்கான விதிகளில் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை மற்றும் அரசிதழ் வெளியீடு.

No comments:

Post a Comment