Friday, June 14, 2024

செய்தித் துளிகள் -14.06.2024(வெள்ளிக்கிழமை)

🍒🍒1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை

👉1,563 மாணவர்களுக்கு ஜூன் 23ல் நீட் மறு தேர்வு நடத்தப்பட்டு ஜூன் 30ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்களை சேர்க்காத உண்மையான மதிப்பெண்கள் தெரிவிக்கப்படும். தேசிய தேர்வு முகமை பதிலை ஏற்று நீட் மறு தேர்வை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரை

வாக நடத்தி முடிவுகளை வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

🍒🍒பொறியியல் படிப்பு:இன்று முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

👉பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு

தமிழ்நாட்டில் 2024-25 கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் ஜுன் 30-ம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக நடைபெறும். ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளாக தொழில்நுட்ப கல்வி இயக்கம் தகவல். பொறியியல் படிப்பில் சேர 2,53,954 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

🍒🍒நீட் தேர்வு குளறுபடி - நிச்சயம் நடவடிக்கை

``நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம்''

குளறுபடிகளுக்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்  

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

🍒🍒ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான NCET நுழைவுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மேலும் விபரங்களை nta.ac.in, ncet.samarth.ac.in ஆகிய பக்களில் தெரிந்துக்கொள்ளலாம் என்றும் தகவல்.

🍒🍒மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புதல் - தலைமை ஆசிரியர்கள் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒கல்வி, வேலைவாய்ப்பில் மாற்று பாலினத்தவரை சிறப்பு பிரிவினராக கருத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

🍒🍒வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வு 14.06.24 அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒6வது ஊதியக் குழுவின் அடிப்படையில் ஊதியம் பெறுபவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து அரசாணை வெளியீடு.

🍒🍒`இந்து தமிழ் திசை வழங்கும் `இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2023' விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் வரும் 25-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

🍒🍒DSE உயர்நிலைப் /மேல்நிலைப் பள்ளிகளில் பணி நிரவல் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களை பணி விடுவிப்பு செய்தல் - இயக்குனர் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தமிழ்நாட்டில் 44 பின்தங்கிய ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் 308 பேருக்கு தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியீடு.

👉இளநிலை உதவியாளர், நூலகர், ஆய்வக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ₹6,000-ல் இருந்து ₹12,000-ஆகவும், அலுவலக உதவியாளர், கூட்டுபவர், துப்புரவு பணியாளர், காவலாளி, தோட்டக்காரர் ஆகிய பணியிடங்களுக்கு ₹4,500ல் இருந்து ₹10,000-ஆகவும் உயர்வு.

👉இதனால் ஆண்டு ஒன்றுக்கு ₹2.11 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉மாதிரிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு சுமார் 10 ஆண்டிற்கு பின்னர் தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

🍒🍒இதுவரை நான்கு அணிகள் (GROUP1 : INDIA, AUSTRALIA ; GROUP2 : WESTINDIES, SOUTHAFRICA) சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமிருக்கும் நான்கு இடங்களுக்காக அணிகளுக்கிடையே கடும்போட்டி நிலவுகிறது. இதனால் அடுத்து வரும் சில போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கப்போகின்றன.

🍒🍒தொலைபேசி ரகசிய உரையாடல்களை வெளியிட்டதாக பதியப்பட்ட வழக்கில் இருந்து சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தற்போது சிபிசிஐடி தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கில், சிறையில் உள்ள சவுக்கு சங்கர் 4 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🍒🍒விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள், கண்மாய்களில் மண் எடுக்க அனுமதி.

🍒🍒ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம்:

👉ரீட்டா ஹரீஷ் தாக்கர்-மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர்

👉நந்தகுமார்- மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்

👉நாகராஜன்-நிதித்துறை [செலவினம்] அரசு செயலாளர்

👉சிஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை

👉சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத்துறை ஆணையர்

👉அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர்

👉பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித்துறை முதன்மை செயலாளர்

👉சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர்

👉சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்]

👉பூஜா குல்கர்னி-உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி, நிதித்துறை சிறப்பு செயலாளர்

👉அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குனர்

👉லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)

👉விஜயராஜ்குமார்-பிற்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர்

🍒🍒சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் ‘ஆனைமலை’ எனப் பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், பணியை முடித்து ஓட்டேரி நிலையத்தை அடைந்தது.

8 மாதங்களுக்குப் பிறகு அதன் இலக்கான 925 மீட்டர் நீளத்தை நிறைவு செய்துள்ளது                                        🍒🍒3வது முறையாக பதவி ஏற்ற பின் முதல்முறையாக செல்லும் இத்தாலி பயணத்தால் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் 

இத்தாலி அரசு அழைப்பின் பேரில் செல்கிறேன்

பல்வேறு வெளிநாட்டு தலைவர்களை சந்திப்பதில் ஆவலாக உள்ளேன்

பிரதமர் மோடி பதிவு

🍒🍒வெளி மாநில பதிவெண் வாகனங்களுக்கு அவகாசம்.

👉வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க திங்கட்கிழமை வரை அனுமதி

👉வாரயிறுதி மற்றும் பக்ரீத் பண்டிகையை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அனுமதி.

👉இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில்,கால நீட்டிப்பு

👉தமிழகத்தில் 547 வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா பேருந்துகள் விதிகளை மீறி இயக்கப்பட்டு வருகிறது.

🍒🍒"எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை"

"அண்ணா கண்ட சின்னம் உதயசூரியன் என்றால்,  அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கண்ட சின்னம் பானை

விசிக தலைவர் திருமாவளவன்

🍒🍒பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக உள்ள பி.கே.மிஸ்ரா அப்பதவியில் தொடர்கிறார்

 தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல், அப்பதவியில் தொடர்கிறார்

பிரதமர் அலுவலகத்தில் ஆலோசகர்களாக உள்ள அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் அதே பதவியில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடர்கின்றனர்

பணியாளர் நலன் அமைச்சகம் அறிவிக்கை

🍒🍒அண்ணா உணவகத் திட்டத்திற்கு சந்திரபாபு நாயுடு கையெழுத்திட்டார்.

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்ற பின் அண்ணா உணவகம் உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

முதியோர் உதவித் தொகையை மாதம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4ஆயிரமாக உயர்த்தும் திட்டத்திற்கும் கையெழுத்து.

🍒🍒திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை முருகன் கோவிலில் பெண்கள் துப்பட்டா அணியாமல் வந்தாலோ,  லெக்கின்ஸ் உடையில் வந்தாலும் அனுமதி இல்லை எனஅறிவிப்பு

🍒🍒நெல்லை மாவட்டத்தில் 29 உதவி காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

🍒🍒குவைத்தில் 195 பேர் தங்கியிருந்த கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது"

👉"பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்"

👉"யாரும் அச்சப்பட தேவையில்லை, அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது"

👉"வெளிநாடு செல்லும் தமிழர்களின் நலனுக்காக தான், அயலக தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டது"

👉"பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது"

👉"5 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது"

👉"உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"

👉"தமிழக அரசு அறிவித்த எண்ணிற்கு சிலர் தொடர்பு கொண்டுள்ளனர்"

👉"குவைத்தில் உள்ள தமிழர்களின் குடும்பத்தினர், தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்"

-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

🍒🍒தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு சென்னையில் 22 கேரட் ஆபணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,660க்கு விற்பனை

🍒🍒முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

🍒🍒இஸ்லாமிய சமுதாய மக்களின் கோரிக்கைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த நிர்வாகிகள்.!

No comments:

Post a Comment