Friday, June 28, 2024

பாரம்பரிய அரிசிகளின் மகிமை

ஒரு நிமிடம் செலவு செய்து  இதை படித்து பாரம்பரிய அரிசிகளின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்... வருங்கால நம் பிள்ளைகளுக்கு இப்படி பட்ட அரிசிகள் மருத்துவ குணமுடையது என தெரிவிப்பது நம் கடமையாகும்*


*காட்டுயானம் அரிசி*


பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்று இந்த காட்டுயானம். இந்த நெல் வகையை பற்றி இந்த பதிவில் தெளிவாகப்

பார்க்க இருக்கிறோம்.


*பெயர்க் காரணம்*

7 மாதங்களில் வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருக்கும் இந்த காட்டுயானம் நெல்லானது 7 அடி முதல் 8 அடி வரை நன்கு செழித்து வளர்ந்து காணப்படும். அதாவது யானையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து வளர்வதால் இப்பெயர் பெற்றது என்றும். இந்த அரிசியைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு யானை பலம் கிடைக்கும் என்பதாலும் இந்த பெயர் பெற்றது என்றும் கூறுகின்றனர்.


*வண்ணம்*

இந்த அரிசியானது இப்போது கிடைக்கின்ற அரிசி போன்று வெள்ளையாக இருக்காது. சிவப்பு நிறத்தில் கொஞ்சம் தடித்துக் காணப்படும்.


*காட்டுயானம் அரிசி உண்பதால் உண்டாகும் பலன்கள்*


*புற்றுநோயைப் போக்கும்*


காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் உருவாகும் புற்று நோய் செல்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்டது.


*மலச்சிக்கல் பிரச்சனை* 


மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்குக் காட்டுயானம் அரிசி உதவுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.


*நீரிழிவு நோய் குணமாகும்*


இந்த அரிசியைச் சாப்பிட்டாலே நீரிழிவு நோய் நம்மை நெருங்கவே நெருங்காது. நீரிழிவு நோயாளிகள் இந்த காட்டுயானம் அரிசியைச் சமைத்துச் சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சர்க்கரை நோய் குணமாவதுடன் சர்க்கரை அளவு சமநிலையிலும் இருக்கும்.


*இதய நோய் குணமாகும்*

ஆண்டி ஆக்சிடன்ட் இந்த அரிசியில் அதிகளவு இருப்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும். இதய சம்மந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த காட்டுயானம் அரிசியை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.


*இன்னும் பிற பயன்கள்*


இந்த அரிசி செரிமானம் ஆகி, கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் குளுக்கோஸை (Glucose) சேர்ப்பதால், பயணங்களில் சாப்பிடச் சிறந்தது.

நீடித்த எனர்ஜி கிடைக்கும். மேலும் விந்து விருத்தியும், அதிக பலமும் உண்டாகும்.

No comments:

Post a Comment